லண்டன்: பணம் படுத்தும் பாடு என்று சொல்வார்கள்.. பிணமாக இருந்தாலும் பணத்தைப் பார்த்தால் வாய் திறக்கும் என்பார்கள்.. அந்த அளவுக்கு உலகிலேயே மோசமான ஒரு அபாயம் எது என்றால் அது பணம்தான். அந்தப் பணத்தால் அருமையான உறவுகளைத் தொலைத்து விட்டு வெறுத்துப் போய் இருக்கிறார் ஒரு பெண்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கில்லியன் பேபோர்ட். இவருக்கு 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரோ மில்லியன்ஸ் லாட்டரியில் ரூ. 1551 கோடிக்கு பிரைஸ் கிடைத்தது.. தனது வாழ்க்கையே வசந்தமாகப் போகிறது என்று நினைத்து மகிழ்ந்து குதூகலித்தார் கில்லியன்.. ஆனால் அதற்குப் பிறகு நடந்தது அவரை அதிர வைத்தது.. அட என்னடா வாழ்க்கை இது என்று வெறுத்துப் போகும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
அப்படி என்னதான் நடந்தது.. அதை கில்லியனே இப்போது சொல்லியுள்ளார்.
மிகப் பெரிய அளவில் அவருக்கு பணம் பரிசாக கிடைத்ததைத் தொடர்ந்து அவரை விட்டு விலகியிருந்த பல உறவுகளும் கூட, அவரை நோக்கி வரத் தொடங்கினர்.. பாசத்தால் அல்ல, பணத்தை அடைவதற்காக. அனைவருமே அவரிடமிருந்து அந்தப் பணத்தை எப்படி அடைவது என்பது மட்டுமே குறியாக இருந்தது.
கில்லியனின் கணவரும் அவர்களில் ஒருவர். கணவருக்கும் இந்த லாட்டரிப் பரிசில் பங்கு இருந்தது. ஆனால் பெருமளவிலான பணத்தைக் கேட்டு நிர்ப்பந்திக்க ஆரம்பித்தார் கில்லியனின் கணவர். இதனால் வெறுத்துப் போன கில்லியன், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
தன்னிடம் ஏதேதோ காரணங்களைக் கூறி பணம் கேட்டு நெருக்கிய உறவுகளுக்கு மொத்தமாக 25 மில்லியன் டாலரைக் கொடுத்தார் கில்லியன். பிறகு தனது கடன்களை அடைத்தார். இந்தக் கடன்களும் கூட அவர் வாங்கியதில்லையாம். நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள்தானாம்.
குடும்பத்தினர் வாங்கிய கடன்களுக்காக மட்டும் 13 லட்சத்து 24 ஆயிரத்து 304 டாலர் பணத்தை அவர் செலவிட்டுள்ளார். அவரது தந்தை, சகோதரர் காலின் ஆகியோர் வாங்கிய கடன்களும் இதில் அட்கம். தொடர்ந்து தனது குடும்ப உறவுகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டே வந்துள்ளார். தனது பெற்றோருக்காக கிழக்கு ஸ்காட்லாந்தில் பிரமாண்ட வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இத்தனை செய்தும் உறவுகள் விடவில்லையாம். தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டே நச்சரித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் கில்லியன் பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார். அவ்வளவுதான்.. அதுவரை அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக பேச்சை நிறுத்தி விட்டு விலக ஆரம்பித்துள்ளனர். பணம் தராவிட்டால் உறவு இல்லை என்ற ரீதியில் அவர்கள் விலகவே, அப்போதுதான் உறவினர்களின் பணத்தாசை புரிந்து அதிர்ந்தும், வேதனையில் மூழ்கியும் உள்ளார் கில்லியன்.
பெற்ற தாய் தந்தையே கூட கில்லியனுடன் பேசுவதை நிறுத்தி விட்டனராம். சகோதரர் பேசுவது கிடையாதாம். கணவரும் விலகி விட்டார். யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க மறுத்தாரோ அவர்கள் எல்லாம் விலகவே வெறுத்துப் போய் விட்டாராம் கில்லியன்.
எல்லோரையும் இந்தப் பணம் மகிழ்ச்சிப்படுத்தும் என்றுதான் நான் நினைத்தேன்.. ஆனால் என்னுடைய மகிழ்ச்சியையும், உறவுகளையும் இந்தப் பணம் கொண்டு போய் விட்டது என்று விரக்தியுடன் கூறுகிறார் கில்லியன்.
"பில்லியன்" இருந்து என்ன பயன்.. "மில்லியன்" கிடைத்தும் என்ன பலன்.. கடைசியில் "கில்லியன்" வெறுத்துப் போய்ட்டாரே!
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}