சென்னை: சார்பட்டா பரம்பரையில் வந்த போது பெரிதாக அடையளம் காணப்படவில்லை.. ஆனால் "வீராயி" இன்று அத்தனை தமிழ் மனங்களிலும் ஆழமாக உட்கார்ந்து விட்டார்.. !
கீதா கைலாசம்.. திறமைகளுக்கு வயது கிடையாது.. எந்த வயதிலும் அது வெளிப்பட்டே தீரும்.. அது ஒரு காட்டாற்று வெள்ளம் போல.. அதைத் தடுக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது.. அப்படிப்பட்டவர்தான் கீதா கைலாசம்.
கீதா கைலாசம் யாருன்னு சொல்லணும்னா.. அவர் அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நாடகக் கலைஞர், சிறந்த சிந்தனையாளர்.. ஆனால் அவர் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம்தான் வெளியில் தெரிய ஆரம்பித்தார். அதுதான் அவரது முதல் படம். அப்போது அவருக்கு வயது 50.. ஆனாலும் என்ன.. ரங்கன் வாத்தியார் மனைவியாக அவர் கலக்கியிருந்தார். பலரையும் அடடா யார் இவர் என்று கேட்க வைத்தார்.
அவரது கேரக்டர் பெரிதாக பேசப்படாவிட்டாலும் கூட அவரைப் பார்த்து யார் இவர் என்று கேட்க வைத்தது கீதாவிடமிருந்து வெளிப்பட்ட அந்தத் திறமைதான். அந்த கேரக்டருக்குரிய நுனுக்கங்களை அத்தனை அழகாக கொடுத்திருப்பார் கீதா.
கீதா அதன் பிறகு பெரிதாக நடிக்கவில்லை. நல்ல கேரக்டருக்காக காத்திருந்தார். அப்போதுதான் மாரி செல்வராஜிடமிருந்து அழைப்பு வந்தது.. வாங்க மாமன்னன் படத்துல ஒரு கேரக்டர் இருக்கு என்று கூப்பிட்டபோது ஹேப்பி ஆகி விட்டார்.. ஆனால் வடிவேலுவுக்கு ஜோடியாக என்று சொன்னதும் ஜெர்க் ஆகி விட்டதாம்.. அச்சோ அவர் எவ்வளவு பெரிய நடிகர்.. அவருக்கு ஜோடியாவா என்று பேக்கடித்துள்ளார்.. ஆனால் மாரி செல்வராஜ் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்து விட்டார்.. இப்படித்தான் உருவானார் வீராயி.
மாமன்னன் படத்தில் வடிவேலு கேரக்டருக்கு நிகரானது வீராயி. இந்த கேர்கடருக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு.. மாறாக தத்ரூபமாக "வாழ வேண்டும்".. உணர்வுகளை அழகாக கொடுக்க வேண்டும்.. அதிலும் அளவாக கொடுக்க வேண்டும்.. இதைத் தவிர வேறு வழியே இல்லை. நடித்தாலோ அல்லது மிகையாக மாறினோலோ அது பத்தோடு பதினொன்றான அம்மா கேரக்டராக மாறியிருக்கும்.
வீராயி கேரக்டராகவே மாறிப் போயிருப்பார் கீதா. அவரது ஒவ்வொரு அசைவும் அத்தனை அழகாக அமைந்திருக்கும். நடப்பது, உட்காரும்போது காட்டும் முக பாவனை, இடுப்பு அசைவு, மூக்கு கூட அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும். ஒவ்வொரு உணர்வையும் ரொம்ப இயல்பாக, எதார்த்தமாக கொடுத்திருப்பார் கீதா.. அந்த இயல்புதான்.. வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் என எல்லோரையும் தாண்டி கீதாவையும் ரசிக்க வைத்திருக்கிறது.
கீதா கைலாசத்தின் மாமனார்தான் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர்.. எத்தனையோ பேரை செதுக்கிய கே. பாலச்சந்தர் தனது மருமகளிடம் மட்டும் நடிக்கிறாயா என்று கேட்டதில்லையாம்.. ஆனால் நடிப்பது என்றால் கீதாவுக்கு அவ்வளவு பிடிக்குமாம். பாலச்சந்தரின் மகன் கைலாசத்தை மணப்பதற்கு முன்பு நடிப்பு ஆசை இருந்திருக்கிறது. பின்னர் மின்பிம்பங்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார். கூடவே ஆடிட்டர் வேலையும் சேரந்து கொள்ளவே இவரது நடிப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டது. காரணம் நேரமின்மை.
ஆனால் இவரைத் தேடி கட்டில் பட வாய்ப்பு வந்தபோது அந்தக் கதை இவரை இழுத்துப் போட்டு விட்டதாம் "நடிப்புக் கட்டிலில்". உணர்வுகளையும் சென்டிமென்ட்களையும் கொட்டிக் கலக்கும் வேடம் இது.. பிரமாதமாக பண்ணியிருப்பார் கீதா.
கடந்த ஆறு வருஷமாகத்தான் நடிப்பு பக்கம் அக்கறை செலுத்தி வருகிறார் கீதா. நடித்தது விரல் விட்டு எண்ணம் அளவிலான படங்களே என்றாலும் கூட பிரமிக்க வைத்துள்ளார் கீதா.. நிச்சயம் இவரது நடிப்புத் திறமையை நிறைய படங்களில் காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.. வெல்கம் பேக் ஸ்டிராங் கீதா.. அடிச்சு கலக்குங்க!
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}