சென்னை: அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை் நடத்தி வருகின்றனர். அவர் வலிப்பு வந்தது போல நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது.
சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய கோட்டூர்புரம் போலீஸார், ஞானசேகரன் என்ற நபரை கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி ஞானசேகரன் போனில் சார் என குறிப்பிட்டதாகவும், இதனால் யார் அந்த சார் என்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. ஆனால் இது எல்லாவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் திட்டவட்டமாக மறுத்தார். ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் வெறும் அனுதாபிதான் என்றும் அவர் விளக்கியிருந்தார்.

இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ஞானசேகரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் எப்ஐஆர் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். 7 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். 2வது நாள் விசாரணையின் போது நேற்று அதிகாலை 3 மணியளவில் ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, ஞானசேகரன் ஸ்டாலின் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அப்போது டாக்டர்கள் மேற்கொண்ட சோதனையில், வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது நாடகம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
{{comments.comment}}