- கலைவாணி கோபால்
சென்னை: உலக அளவில் தங்கம் என்பது மதிப்பில் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. அதனால்தான் என்னவோ இதன் மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. விலையும் தாறுமாறாக ஏறிக் கொண்டே போகிறது.
டிட்வா புயல் வந்தபோது பரபரப்பாக இருந்தது. பயங்கரமாக தாக்கப் போகிறது என்றெல்லாம் பயந்தோம்.. ஆனால் டிட்வா புயல் போயே போய் விட்டது.. அந்த இடத்தை இப்போது தங்கம் விலை பிடித்துக் கொண்டு விட்டது. புயலுக்குப் போட்டியாக தங்கத்தின் விலை வேகமாக ஏறிக் கொண்டே போகிறது.
கோவிட்-19 போதும், அதற்குப் பின்னால் வரும் சூழல் எதுவாக இருந்தாலும் தங்கத்தில் விலை மட்டும் மாறாமல் இருப்பதற்கு காரணம் அதிக முதலீட்டாளர்கள் தங்கத்தை தங்கள் முதலீடுகளை தங்கத்தில் முதலீடு செய்து வருவதே காரணம்.

இந்த நிலையில், கூலான டிசம்பர் மாதம் தங்கத்தைப் பொறுத்தவரை படு சூடாக பிறந்துள்ளது. சென்னையில் (டிசம்பர் 1 )இன்று, ஆபரணத் தங்கம் ரூபாய் 760 அதிகரித்து, 22 காரட், ஒரு கிராமுக்கு ரூபாய் 90 அதிகரித்து 12,070 கும், 8 கிராம் தங்கம் ரூபாய் 96 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லட்சத்துக்கு பக்கத்துல வந்துருச்சு பாருங்க தங்கம் விலை!
அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூபாய் 4ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 196 க்கு, ஒரு கிலோ வெள்ளி ரூபாய் ஒரு லட்சத்து 96 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை ஏற்றம் என்பது டாலர்களின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே அமைகிறது என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!
ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு
பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
{{comments.comment}}