Gold Rate: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று.. தங்கம் விலை கிடுகிடு உயர்வு

Nov 18, 2024,03:21 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ.480 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை  ரூ.6,995க்கும், ஒரு சவரன் ரூ.55,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்தது. ஐப்பசி மாதத்தில், இந்த விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி கிராமிற்கு ரூ.10 அதிகரித்த தங்கம் 16ம் தேதி கிராமிற்கு ரூ.10 குறைந்தது. இதனையடுத்து வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


சென்னையில் இன்றைய (18.11.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.480 அதிகரித்து ரூ.6,995க்கும், ஒரு சவரன் ரூ.55,960க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,960 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.69,950 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,99,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,631 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,048 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.76,310 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,63,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,631க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,646க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,631க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,631க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,631க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,631க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,636க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ. 6,814

மலேசியா - ரூ.6,953

ஓமன் - ரூ. 7,113

சவுதி ஆரேபியா - ரூ. 6,835

சிங்கப்பூர் - ரூ.6,972

அமெரிக்கா - ரூ. 6,920

துபாய் - ரூ.7,042

கனடா - ரூ.6,817

ஆஸ்திரேலியா - ரூ.6,644


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


வெள்ளி விலை கடந்த 15ம் தேதியில் இருந்து இன்று வரை எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.99 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

news

2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

news

பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

news

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி

news

தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு

news

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"

அதிகம் பார்க்கும் செய்திகள்