திங்கள் தித்திப்பு.. தங்கம் விலை சற்றே குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

Apr 29, 2024,06:58 PM IST

சென்னை: கடந்த சில நாட்களாக புதிய வரலாற்று சாதனை படைத்த தங்கம் இன்று குறைந்துள்ளது. கடந்த சனியன்று உயர்ந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது எனலாம்.


சமீபகாலமாக தங்கம் விலை நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே புதிய உச்சம் பெற்று இருந்தது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தினாலும், இந்த விலை ஏற்றம் முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது.




இந்திய மக்கள் மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்கள் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வந்தது. 


இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம் விலை குறைவு என்பது சாராண மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சி மழையில் நனைத்துள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,740 ரூபாயாக உள்ளது. இது கடந்த சனிக்கிழமை விலையில் இருந்து 30 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.240 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,920 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,353 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,824 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்துள்ளது. 


சென்னையில் வெள்ளி விலை...


இன்றைய வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி கடந்த சனியன்று விற்ற அதே விலைக்கே விற்கப்படுகிறது.  இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ. 87.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 700 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.87,500 க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்