சென்னை: கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடந்துள்ளனர்.
அக்டாபர் மாதம் தொடக்கத்தில் குறைந்திருந்த தங்கம் அக்டோபர் முடிவில் ஏற்றம் கண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் மிகுந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 208 குறைந்துள்ளது.
கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ. 656 குறைந்துள்ளது. தீபாவளி, முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி நகை விலை குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் நகைக்கடைகளில் அதிகரித்து வருகிறது. நகை விலை குறைந்திருப்பது ஒரு புரம் மகிழ்ச்சி என்றால், வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு கடைக்காரர்கள் விழா காலம் என்பதால் பரிசுகளையும் அள்ளித் தருகின்றனர். இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல காலம் என்றே செல்லலாம்.

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5686 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 29 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45488 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6203 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 32 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49624 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 1.20 காசுகள் குறைந்து ரூபாய் 74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது. சர்வதேச பங்குச்சந்தைகளில் மந்தமான போக்கு நிலவி வருவதால் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!
கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
{{comments.comment}}