ஒரு நாள் ஏற்றம்..  மறு நாள் இறக்கம்.. இது தான்  தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

Oct 27, 2023,01:45 PM IST

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறியபடியே உள்ளது. இன்றும் அதே நிலைதான்.


செப்டம்பர் மாதம்  இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை அக்டாபர் மாதம் உயரத்தொடங்கியது. அக்டோபர் மாத தொடக்கத்தில்  உயர்ந்திருந்த தங்கம் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் மீண்டும் இறங்கியது. இந்த விலை இறக்கம் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. 


தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகளவில் இருப்பதினால் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்பொழுது கடுப்பாகி உள்ளனர். என்னடா இது என்று தலையில் கைவைத்து புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எது எப்படியோ இன்றைய தங்கம் விலையை நாம் பார்ப்போம்.




தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்றால், 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5705 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45640 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6225 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 49800 ஆக உள்ளது.


தங்கம் விலையால் கடுப்பாக வாடிக்கையாளர்களுக்கு வெள்ளி விலை சற்று ஆறுதலை தந்துள்ளது. வெள்ளியின் இன்றை விலை குறைவு. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.60 காசாக உள்ளது. இது நேற்றைய விலையை விட 0.50 காசுகள் குறைந்துள்ளது.  8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 596.80 காசாக உள்ளது. 

நாட்டில் பணவீக்கம் அதிகரித்தல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளவில் உள்ள பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்