மக்களே உஷார்...தங்கம் விலை தாறுமாறாக ஏற போகுதாம்...காரணம் என்ன தெரியுமா ?

Oct 18, 2023,12:31 PM IST

சென்னை: கடந்த ஒரு மாதமாக இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் துவங்கி உள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து  வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் தாறுமாறாக எகிற வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


தங்கத்தின் இன்று (அக்டோபர் 18) 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5565 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 50 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44,520 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6071 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 55 ரூபாய் அதிகமாகும். 




தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூ.74.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 596.80 காசாக உள்ளது. 


நேற்று வரை குறைந்திருந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தே  இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல்-பாலஸ்தீனியர்கள் ஆகியோருக்கு இடையே போர் மூண்டுள்ளதால் பொருளாதாரத்தில் நிலையற்ற நிலை உருவாகி வருகிறது. இதனால் மக்கள் எதில் முதலீடு செய்வது என்று தெரியாமல், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 


தங்கம் விலை உயர்விற்கான காரணங்கள் :


1. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, உலக அளவில் பொருளாதாரத்தில் இருக்கக் கூடி ஏற்ற இறக்கமான சூழல் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு சரிந்ததால் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கிறது. இந்த இழப்பை ஈடு செய்வதற்காக தங்கம், வெள்ளி விலை உயர்த்தப்படலாம்.


2. நவராத்திரி, தீபாவளி, கல்யாண சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக பண்டிகை கால கொண்டாட்டங்கள் வருவதால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கண்டிப்பாக அதிகரிக்கக் கூடும். சென்டிமென்டாக தங்கம் அதிர்ஷ்டம் மற்றும் புனிதமான பொருளாகவும், கெளரவத்தின் அடையாளமாகவும் கருதப்படுவதால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, கண்டிப்பாக விற்பனையும் அதிகரிக்கக் கூடும். இதனால் விலையும் உயரும்.


3. உலகளாவிய அரசியல், நிலையற்ற தன்மை, இஸ்ரேல் போர் போன்ற காரணங்களால் பாதுகாப்பான சொத்துக்கள் மீது முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். அதற்கு சரியான தேர்வாக தங்கமே உள்ளது. தங்கத்திற்கான மதிப்பு எப்போதும் குறையாது என்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.


4. பணவீக்கம் அதிகரிக்கும் போது விலைஉயர்ந்த உலோகங்களின் மீதான விலையும் உயருவது சகஜமான ஒன்று தான். அதுவும் தங்கத்தின் தேவை அதிகமாகவே காணப்படுவதால் விலையும் தானாக உயர வாய்ப்புள்ளது. உலகில் நிலையற்ற தன்மை ஏற்படும் போதும், பணவீக்கம் அதிகரிக்கும் போது முதலீட்டாளர்களின் ஒரே நம்பிக்கையாக விளங்குவது தங்கம் தான். இதனால் இனி வரும் காலங்களிலும் தங்கத்தின் விலை தாறுமாறாக எகிற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்