விடாமுயற்சி எப்பன்னு தெரியாது.. ஆனால் குட் பேட் அக்லி.. பொங்கலுக்கு கன்பர்ம்ட்.. சூப்பர் நியூஸ்!

Nov 27, 2024,03:49 PM IST

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள குட் பேட் அட்லி திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சூசகமாக கூறியுள்ளார்.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியா முழுவதும் வைரலானது. ஏனெனில் இந்த போஸ்டரில் அஜித் குமார் மூன்று தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி  இப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.




மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துடன், நடிகை திரிஷா, நடிகர் பிரசன்னா,அர்ஜுன் தாஸ், யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.


இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பாளர் கலந்து கொண்டுள்ளார். அப்போது குட் பேட் அக்லி திரைப்படம்  சிறப்பாக வந்துள்ளது. படம்  முழுமை அடைய இன்னும் ஏழு நாட்களே உள்ளன. இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியுள்ளார். இதனால் அடுத்த பொங்கல் தல பொங்கல் என்று ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு

news

திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?

news

சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ரவி மோகன்... இயக்குனராகவும் அவதாரம்!

news

அது என்ன 39% ஓட்டுக் கணக்கு.. அமைச்சர் அமித்ஷா சொன்னது இதைத் தானா?

news

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம்.. காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!

news

குருதிப்பூக்கள் (சிறுகதை)

news

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

news

வந்துருச்சு "பிள்ளையார் சதுர்த்தி".. பூரண கொழுக்கட்டை பண்ணலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்