சென்னை: ஜிபே பயன்படுத்துவோரிடையே ஒரு பீதியைக் கிளப்பும் வாட்ஸ் ஆப் ஆடியோ பரவிக் கொண்டுள்ளது. அதாவது பாக்கெட் மணி என்ற பெயரில் ஒரு ஸ்பேம் நடக்கிறது. அந்த ஐக்கானை அழுத்தினால் உங்களது பணம் முழுக்க திருடப்பட்டு விடும் என்பதே அந்த ஆடியோவின் சாராம்சம். ஆனால் உணமையில் அந்த ஆடியோதான் ஸ்பேம்.. பாக்கெட் மணி அருமையான ஸ்கீம்!
கூகுள் பே (Google Pay) அறிமுகப்படுத்தியுள்ள புதிய 'பாக்கெட் மணி' (Pocket Money) திட்டம் குறித்த விவரத்தை இப்போது பார்ப்போம்.
வங்கி கணக்கு இல்லாமலேயே இனி கூகுள் பே பயன்படுத்தலாம்.. பெற்றோர்களுக்கான புதிய 'பாக்கெட் மணி' திட்டம் அதற்கு வழி வகுக்கிறது.
கூகுள் பே செயலி தனது பயனர்களுக்கு ஒரு புதிய மற்றும் பயனுள்ள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு 'பாக்கெட் மணி ஆன் யுபிஐ சர்க்கிள்' (Pocket Money on UPI Circle) என்று பெயரிடப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு இல்லாத சிறுவர்கள் அல்லது குழந்தைகள், இனி தங்கள் பெற்றோரின் யுபிஐ (UPI) கணக்கை இணைத்து கூகுள் பே மூலம் பணம் செலுத்த முடியும்.
குழந்தைகள் எவ்வளவு பணம் செலவு செய்யலாம் என்பதற்கான வரம்பை (Limit) பெற்றோர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் பெற்றோரின் மொபைலுக்கு உடனுக்குடன் அறிவிப்பு வந்து சேரும்.
இதை எளிதாக நீங்களே செட் செய்து கொள்ளலாம்.
கூகுள் பே செயலியில் உள்ள 'Pocket Money' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். யாரை நீங்கள் பயனராகச் சேர்க்க விரும்புகிறீர்களோ, அவர்களின் மொபைல் எண்ணை அதில் இணையுங்கள். பின்னர் அவர்களின் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த இணைப்பை எளிதாக செட் செய்து விடலாம்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை குழந்தைகளுக்கும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் நோக்கில் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பயப்படாமல் இதைப் பயன்படுத்திப் பாருங்கள்.
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
{{comments.comment}}