கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

Jul 08, 2026,06:07 PM IST

மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூலை 8, 2026) அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.


கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவிகளும், அரசு வேலையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய், கரூர் செல்லும் போது இந்த அரசு வேலைக்கான அரசாணையை நேரில் வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக அதற்கு தடை வாங்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.




அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு உடனடியாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.


இந்த மனுவை இன்று பரிசீலித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான கேள்விகளையும் எழுப்பினர். நீதிபதிகள் தங்களது உத்தரவில், "இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மனுதாரர் ஏன் அங்கேயே இந்த கேள்வியை முன்வைக்கக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, அதே விவகாரத்திற்காக இங்கே அவசர வழக்காக விசாரிக்கக் கோருவதை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள் இந்த கோரிக்கையை நிராகரித்தனர்.


கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் மற்றும் அது தொடர்பான சிபிஐ விசாரணை ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற கிளை மறுத்திருப்பது இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நடைமுறைகள் தடையின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கும், கரூர் விவகாரம் குறித்தும் பேசுவதற்கும் தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட், திமுக தொடர்ந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க கோர்ட் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்