நான் ஏன் தமிழகம் என்று பேசினேன்.. ஆளுநர் ஆர். என்.ரவி விளக்கம்

Jan 18, 2023,02:53 PM IST
சென்னை: தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி ஒரு விளக்கம் அளித்துள்ளார்.



இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:

"2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது.

அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை எனது மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்." 

எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்