சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் கூட்டம் தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் இறங்கினர். இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவியும், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்றார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் உரையுடன் தான் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைமை செயலகத்தில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது அதன் பிறகு அவருக்குப் பொன்னாடை அளித்து வரவேற்ற சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார்.
அதன் பின்னர் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டசபை மரபுப்படி, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர். என். வெளியேறினார். மறுபக்கம் அதிமுகவினர் பெரும் அமளியில் இறங்கினர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர். பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் கோஷமிட்டதால் சபையில் பெரும் அமளியாக இருந்தது.
இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன் பின்னர் அதிமுகவினர் வெளியேறினர். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதன்பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது ஒத்திவைக்கப்படும். அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}