ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சொத்துக்களை தனக்குப் பிரித்துத் தராத தாத்தா மீது கடும் கோபமடைந்த பேரன் சரமாரியாக கத்தியால் குத்தி அவரைப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவரின் பெயர் வி. சி. ஜனார்த்தன ராவ். பிரபலமான தொழிலதிபர். ரூ. 460 கோடி மதிப்பிலான வேல்ஜென் குரூப் ஆப் கம்பெனிஸீன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். 86 வயதான ஜனார்த்தன ராவ் வயது மூப்பு காரணமாக தனது சொத்துக்களைப் பிரிக்க முடிவு செய்தார். மேலும் தனது நிறுவனங்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை தனது மூத்த மகளின் மகனான ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்திருந்தார். மேலும் தனது 2வது மகள் சரோஜினியின் மகன் தேஜா கீர்த்திக்கு ரூ. 4 கோடி அளவிலான பங்குகளை மட்டும் ஒதுக்கியிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் படிப்பை முடித்து விட்டு ஹைதராபாத் திரும்பிய தேஜா தனது தாயாருடன் தாத்தா வீட்டிற்குச் சென்றார். சரோஜினி டீ போட உள்ளே போயிருந்தார். தாத்தாவுடன் தேஜா பேசிக் கொண்டிருந்தார். அப்போது சொத்துப் பிரிவினை குறித்து தாத்தாவுடன் பேசினார் தேஜா. அதில் முரண்பாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. அந்த சமயத்தில் கடும் கோபமடைந்த தேஜா மறைத்து வைத்திரு்நத கத்தியை எடுத்து சரமாரியாக தாத்தாவைக் குத்த ஆரம்பித்தார்.
வெறித்தனமாக செயல்பட்ட அவர் கிட்டத்தட்ட 73 முறை தாத்தாவைக் குத்தியுள்ளார். இதில் ஜனார்த்தன ராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்.
தனது தந்தையை மகன் வெறித்தனமாக குத்துவதைப் பார்த்து அலறித் துடித்த சரோஜினி, மகனைத் தடுக்க முயன்றார். ஆனால் தடுக்க வந்த தனது தாயையும் சரமாரியாக குத்தினார் தேஜா. அதில் அவரும் படுகாயமடைந்தார்.
தாத்தாவையும் தாயாரையும் குத்தி விட்டு வெளியே வந்த தேஜா, வாட்ச்மேனை மிரட்டி விட்டு அங்கிருந்து போய் விட்டார். பின்னர் அவரைப் போலீஸார் பிடித்துக் கைது செய்தனர். சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது போதையில் தேஜா இருந்ததாக தெரிய வந்துள்ளது.
ஜனார்த்தன ராவ் நிறைய தான தர்மங்கள் செய்பவராம். பெருமளவில் தானங்கள் வழங்கியுள்ளார். ஏலூரு அரசு மருத்துவமை மற்றும் திருப்பதி கோவிலுக்கும் அவர் நிறைய செய்துள்ளாராம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!
அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!
முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்
இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!
தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!
நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்
தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
{{comments.comment}}