Indoor and Outdoor plant.. மணி பிளான்ட்:.. மணி மணியா வளர்க்கலாம்.. அழகா இருக்கும்!

Jul 23, 2025,06:46 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மணி பிளான்ட் இதனை செடியாகவும் கொடியாகவும்  வீட்டிற்கு உள்ளேயும் அல்லது வெளியிலும் வைத்து அழகுக்காக மட்டுமல்லாது, பாசிட்டிவ் வைப் (Positive vibe)  நேர்மறை ஆற்றல் மற்றும் காற்றில் உள்ள மாசுகளை ஈர்க்கும் தன்மை உடைய செடி.


மணி பிளான்ட் வைப்பதால் பணம் ஈர்க்கப்படுமா ?...என்றால் இது நேர்மறை ஆற்றல் தரக்கூடிய நேர்மறை ஆற்றல் அதிகம் உள்ள கொடி அமைப்புள்ள ஒரு செடி . பசுமையை பார்த்தாலே நம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். எனவே இது போன்ற செடிகளை நம் வீட்டில் உள்ள இடத்தில் அதற்கு தகுந்தார் போல் ஒரு சிறிய பாட்டில்களில் தண்ணீரிலும் வைக்கலாம், அல்லது சிறிய 

தொட்டிகளில் மண்ணில் வைக்கலாம், வீட்டில் உள்ளும் வைத்து அழகு பார்க்கலாம் ,வெளியிலும் வைத்து அழகு பார்க்கலாம்.




இதனை எந்த திசையில் வைத்தால் அதிக பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் என்பதற்கு வாஸ்து நிபுணர்கள் தென்கிழக்கு திசையை தேர்ந்தெடுத்து வைப்பது மிகவும் நல்லது என்று சொல்வதுண்டு.


மணி பிளான்ட் அதிக நேர்மறை ஆற்றல்களை பெருக்கி ,வீட்டில் இருப்பவர்களின் உடல் நிலையும், மனநிலையையும் பாதுகாத்து வீட்டில் சுபிட்சமான சூழல் ஏற்படுத்துகிறது. இது இரவில் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு வெளிவிடும் செடியாகும்.


காற்றில் உள்ள மாசுகளை உறிஞ்சி கொண்டு சுத்தமான காற்றினை வெளிவிடும் தன்மை இந்த செடிக்கு உண்டு. காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு,  பென் சைன் போன்ற நச்சுக்களை இருக்கும் தன்மை கொண்டது.


இதனை வீட்டினுள் வைப்பதினால் தொலைக்காட்சி, மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை இந்த செடிக்கு அதிகம் உள்ளது. மேலும் வீட்டில் அமைதியான சூழலை தரக்கூடியது. நம்மை சுற்றியுள்ள மாசு கலந்த காற்றை உள்வாங்கிக் கொண்டு, நமக்கு தேவையான நல்ல ஆக்சிஜனை வெளியிடும் நல்ல செடி .எனவே தாவரங்களில் முதல் இடத்தில் உள்ளது இந்த மணி  பிளான்ட் .


இந்த செடியில் இருந்து வரும் ஆக்ஸிஜனை நாம் சுவாசிப்பதால் நம்முடைய உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மணி பிளான்ட் வீட்டில் இருந்தால் காசு பணம் நிறைய வரும் என்றும் எனவே இதனை யாருக்கும் 


தானமாக கொடுக்க கூடாது என்றும் பிறரிடமிருந்து அவருக்கு தெரியாமல் எடுத்து வளர்ப்பதினால் பணம் சேரும் என்பது எல்லாம் சுவாரஸ்யமான சிறு நம்பிக்கை....


இன்றைய காலங்களில் அப்பார்ட்மெண்ட்களில் இருப்பவர்கள் இந்த செடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கிறோம்.


இந்த செடி வெற்றிலை கொடியை போலவே அமைப்பு உடையது. இது காட்டுப் பகுதிகளில் 50 முதல் 60 அடி உயரம் வரை வளரும் .ஆனால் வீட்டில் சிறிய தொட்டிகளில் வைப்பது 10 முதல் 15 அடி வரை வளரும் தன்மையுடையது.


நேரடி சூரிய வெளிச்சம் இந்த செடிக்கு அதிகம் தேவையில்லை அதனால் வீட்டினுள் (Indoor  plant)  வீட்டின் அறையை அலங்கரிக்கும் சிறப்புடையது இந்த மணி பிளான்ட்.




மணி பிளான்ட் எப்படி?... வளர்ப்பது இதனை சிறு கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரில் வைக்க ஒரு வாரம் பத்து நாட்களில் இதற்கு வேர் முளைத்து விடும் பிறகு அதனை எடுத்து சிறிய தொட்டிகளில் மண் நிரப்பி செடியை வைத்து வளர்க்கலாம். தண்ணீரிலேயும் பாட்டில்களில் வளர்க்கலாம் ,ஆனால் வாரம் ஒரு முறை தண்ணீர் மாற்ற வேண்டும் இல்லையேல் ,பசுமை படர்ந்து விடும் .


பழுப்பான இலைகள் இருந்தால் அதனை நீக்கி அழகாக வளர்க்க அழகிய கொடி மணி பிளான்ட். உப்பு ,குளோரின் கலந்த நீர் ஊற்றக்கூடாது ஆர்வோ   (RO) வாட்டர் ஊற்றி தண்ணீரில் வளர்க்கலாம். சிறிய மண் தொட்டிகளில் வளர்ப்பதற்கு   தினமும் ஒரு டம்ளர் தண்ணீரே போதுமானது.


இந்த செடியை வளர்ப்பதற்கு பெரிய இட வசதியும் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் இருக்கும் இடத்தில் வைத்து அழகு பார்க்கலாம். மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

news

சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்

news

டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!

news

இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?

news

சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

அதிகம் பார்க்கும் செய்திகள்