Israel Vs Hamas: "தரைவழியில் தாக்கினால்.. இதான் கதி".. பாகுபலியை மிஞ்சும் ஹமாஸ் வீடியோ!

Oct 15, 2023,02:45 PM IST

காஸா முனை: இஸ்ரேல் ராணுவத்தினரின் தரைவழித் தாக்குதலை சந்திக்க தாங்கள் தயார் என்று ஹமாஸ்  இயக்கம் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர வைத்துள்ளது.


முழு அளவிலான போருக்கு முன்கூட்டியே தயாராகி விட்டுத்தான் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் கையே வைத்துள்ளதாக இந்த வீடியோவைப் பார்த்தால் தெரிகிறது.




இஸ்ரேல் மீது லேசாக யாராவது தும்மினாலே துளைத்து எடுத்து விடும் அந்த நாட்டு அரசு. அந்த அளவுக்கு பக்காவான பாதுகாப்புடன் இத்தனை காலமாக இருந்து வந்தது இஸ்ரேல். ஆனால் இது இப்போது பழங்கதையாகி விட்டது. இஸ்ரேலையும் நடுங்க வைக்க முடியும் என்று உலகுக்குக் காட்டி விட்டது ஹமாஸ். இதை இஸ்ரேலும் எதிர்பார்க்கவில்லை, அதன் தீவிர ஆதரவாளரான அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை.


ஹமாஸ் நடத்திய அதிரடித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் விமானப்படை நடத்தி வந்த அதிரடித் தாக்குதலால் காஸாவின் பல பகுதிகள் சிதிலமடைந்து விட்டன. வீடுகள் நாசமாகி விட்டன. அடிப்படைக் கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு விட்டன. தாக்குதல் நடந்த பகுதிகளில் பெரும்பாலும் அப்பாவி மக்களே உயிரிழந்துள்ளனர்.


இந்த நிலையில் தற்போது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். கிட்டத்தட்ட 10 லட்சம் காஸா மக்களை தென் பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம் மெதுவாக தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. அதேசமயம், இடம் பெயர்ந்து செல்லும் மக்களுக்கு வசதியாக காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் அது கூறியுள்ளது.




இந்த நிலையில் ஹமாஸ் ஒரு  வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் முழு அளவில் அதன் படையினர் தயார் நிலையில் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவில்  ஹமாஸ் படையினர் எப்படியெல்லாம் தரைவழித் தாக்குதலுக்கு தயாராகியுள்ளனர் என்பது விளக்கப்பட்டுள்ளது.  டாங்குகளை தாக்குவது,  ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்தித் தாக்குவது என்று மிரட்டலான பல காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.  மேலும் பல்வேறு இடங்களில் பங்கர்களை அமைத்து அதன் வழியாக ஊடுறுவிச் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 


இந்த வீடியோக் காட்சிகளைப் பார்க்கும்போது ஹமாஸ் அமைப்பு முழு அளவில் தயாராகி விட்டுத்தான் ஹமாஸ் மீது கையே வைத்திருப்பதாக தெரிகிறது. எனவே இஸ்ரேல் ராணுவத்துக்கு பெரிய அளவிலான சவால்கள் இனிமேல்தான் காத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்