கைக்குட்டை காதல்.....!!

Apr 22, 2023,10:51 AM IST
- சீதாலெக்ஷ்மி 

உள்ளங்கைக்குள்
மடித்து வைக்கும் கைக்குட்டை போல
உள்ளப்(ம்) பையினுள்
மடித்து வைத்திருந்தாய்  என்னை....!!

பகல் நேர சூரியன்
தொட்டுத் தொட்டு பார்க்க
அகத்தோலில் ஒளிந்திருக்கும் 
வியர்வைத்துளி புறத்தில் எட்டி பார்த்து நின்று வியர்க்க 
அதை ஒத்திக்கொள்ள எடுக்கும் 
கைக்குட்டை
வாசனை திரவியத்தில் மணக்க..
இதில் ஆரம்பிக்கிறது
கைக்குட்டை காதல்.....!



ஜலதோஷம்  பிடித்திருந்தால்
உதவும் கைக்குட்டை
பிறர் மீது நேசம் வைத்திருந்தாலும் 
உதவும் அக் கைக்குட்டை....!!

"முக"வரி பார்த்து
கவி வரி எழுதி
உள்ளத்தை துணியில் வைத்து
மெல்லப் பின்னி
தூது விடவும் உதவும்.. கைக்குட்டை

துர்நாற்றம் வீசினால்
மூச்சை அடக்கவும்
உதவும் கைக்குட்டை.....!!

தூசுகள்  இருக்கும் இடத்தில
அமர நேர்ந்தால் நமக்கு முன்
விரிந்து கொடுத்து அமரச்செய்யும்
அக் கைக்குட்டை......!!

கைக்குட்டை போன்று
நானும் பயணித்தேன் உன்னோடு
உன் வாழ்வில்.....!!

கைக்குட்டையை 
எதிர்பாராமல்
தவற விடுவதை போல
என்னை தவற விட்டுவிட்டாய்
எதிர்பார்த்தே......!!

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தாத்தா (கவிதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்