சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாண்டு பிறந்ததும் முதல் பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை தான். பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
முதல் நாள் போகிப் பண்டிகை, வேண்டாதவற்றை வெளியேற்றி, நல்லவைகளை வரவேற்பதாகவும், 2ம் நாளில் சூரிய பகவானுக்கும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கலும், 3ம் நாளில் உழவுத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் மாடுகள், நிலம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கலும், 4ம் நாளில் நாளில் உறவுகளுடன் அன்பை புதுப்பிக்கும் தினமாக காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை தெற்கு நோக்கி துவக்கும் காலத்தின் துவக்க நாளே பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசியில் பயணிக்க துவங்கும் இந்த நாளை தென் மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும், வட மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த நாளை அறுவடை திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நாளில் பட்டம் விடும் திருவிழாக்களும் நடத்தப்படும். அதே சமயம் தமிழகத்தில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 07.30 முதல் 08.30 வரையும், காலை 10.30 முதல் 11.30 வரையும் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பொங்கல் வைத்து முதலில் சூரிய பகவானுக்கு படைத்த பிறகு, வீட்டில் படையல் இட்டு பொங்கல், பல விதமான பழங்கள் படைத்து குலதெய்வம் மற்றும் மற்ற தெய்வங்களுக்கும் படைத்து வழிபட வேண்டும்.
அதே போல் ஜனவரி 15ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 09.30 முதல் 10.30 வரையிலான நேரமும், மாலை 04.30 முதல் 05.30 வரையிலான நேரமும் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நேரமாகும். இந்த நாளில் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, மாடுகளுக்கு அழகாக அலங்கரித்து, சாம்பிராணி போட்டு வழிபட வேண்டும். மாட்டு தொழுவத்தில் பொங்கல் வைப்பது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}