Happy Women's day: பெண்கள் எடுத்துக்க வேண்டிய முக்கிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

Mar 08, 2024,12:25 PM IST

சென்னை: வணக்கம் தோழிகளே, அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ஃபிரண்ட்ஸ். 


பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் குடும்பத்தை, வேலைகளை சரியா பார்க்க முடியும். பெரும்பாலான பெண்கள் அவங்க வீட்ல இருக்கவங்கள கவனிக்கிற அளவுக்கு அவங்க ஹெல்த்தை பாத்துக்க மாட்டாங்க. சில பேர் என்னன்னா சமைக்கிற உணவை கூட சரியான டைமுக்கு சாப்பிடாம வெறும் காபி, டீ குடித்துவிட்டு  வேலையில் மூழ்கிடுவாங்க. 


அப்படி செய்யாதீங்க தோழிகளே! உங்க ஹெல்த்திலும் கொஞ்சம் கவனம் தேவைங்க.


நான் இன்னைக்கு பெண்களுக்கு தேவையான அத்தியாவசியமான சில உணவுகள் பற்றி சொல்றேங்க. படித்து பயன் பெறுங்கள் பிரண்ட்ஸ்.


மஞ்சள் - ஆரஞ்சு நிற காய்கறி, பழங்கள் முக்கியம்




பெண்கள் சாப்பிடற உணவுகள்ல மஞ்சள் ஆரஞ்சு நிற, காய்கறி, பழங்கள் அதிகம் எடுத்துக்கணும் பிரண்ட்ஸ். இதிலுள்ள கரோட்டினாய்டு சத்து நம் உடலுக்கு ரொம்ப முக்கியமான ஒன்றுங்க. இது கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும்.


சாலமன், நெத்திலி, மத்தி மீன் போன்ற மீன் உணவுகளையும் பூசணி விதை, பிளக்ஸ் சீட் போன்ற உணவுகளையும் அதிகமாக எடுத்துக்கிட்டா இதய நோய்கள், எலும்பு தேய்மானம், மன நோய்கள் வராமல் நம்ம பாதுகாக்கும்.


அத்திப்பழம் வாரம் 2 முறை அவசியம்




அத்திப்பழத்தை வாரம் இருமுறை உணவுல சேர்க்கிறது அவசியம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்த இழப்பினால் வரும் ரத்த சோகை வராமல் காக்கும். சிறுதானிய வகைகளான ராகி, கம்பு ,கருப்பு உளுந்து, பாரம்பரிய அரிசி வகையான பூங்கார் அரிசியில் செய்த உணவுகள் அதிகமா எடுத்துக்கிட்டா சினைப்பை நீர்க்கட்டிகள், மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.


பச்சை காய்கறிகள், கீரைகள், தக்காளி, பால் போன்ற உணவுகளை எடுத்துகிறதால கால்சியம், அயன் குறைபாட்டை நீக்கலாம்.


பருப்பு, முளைகட்டிய பயறு வகைகளையும் எடுத்துக்கோங்க. பழங்கள் எல்லாமே சிறந்ததுனாலும் பெண்கள் அவசியமா எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்கள் என்றால் மாதுளையும், பப்பாளியும் தாங்க.


பிரேக்பாஸ்ட் லேட்டாகக் கூடாது




காலை உணவை பெரும்பாலான பெண்கள் எடுத்துக்கறதுக்கு 11:00 மணிக்கு மேல ஆயிடுங்க. எல்லா வேலையும் முடிச்சுட்டு அவங்க சாப்பிட லேட் ஆகும். அப்படி பண்ணாதீங்க ஃபிரண்ட்ஸ். காலை உணவா புரதச்சத்து மிக்க சாலட், ஃப்ரூட் சாலட், வெஜிடபிள் சாலட் போன்ற ஹெல்த்தியான உணவை எடுத்துக்கலாம்.


அடுத்த முக்கியமானது என்னன்னா, ஆரோக்கியமான மனநலம். ஹார்மோன் மாறுபாடுனால நிறைய மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். அதனால கோபம், பதற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படும். இதை தடுக்க நிம்மதியான 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.


உடற்பயிற்சி ரொம்ப ரொம்ப அவசியம்




காலை அல்லது மாலை வேளையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி, எளிய யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி, குழந்தைங்க கூட டைம் ஸ்பென்ட்  பண்றதுன்னு இருந்தாலே மனசு லேசாயிடும்.


எப்பவும் பரபரப்பா ஓடிட்டு இருக்காம நம்மளுக்கான நேரம் ஒதுக்கி, நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிட்டா நம்ம உடம்பையும் மனசையும் ஹெல்தியா வச்சுக்கலாங்க. அப்புறம் என்னங்க ஆரோக்கியமா சாப்பிடுங்க. நீங்க பண்ற வேலையில பெஸ்ட்ட குடுங்க. நிறைய சாதனை பண்ணுங்க.


மங்கையராக பிறப்பதற்கு -  நல்ல

மாதவஞ் செய்திட வேண்டும்.


என்ற வரிகளுக்கு ஏற்ப பெண்மையை போற்றுங்கள். பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள்.


நன்றி தோழிகளே மீண்டும் சந்திப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்