சண்டிகர் : அரியானாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபை கடந்த 10 ஆண்டுகளாக பெண் தெய்வமாக நினைத்து வழிபட்டு வரும் ஆச்சரியத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் கத்ரினா கைஃப்பிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் அடிபட்ட இவர் கடந்த ஆண்டு நடிகர் விக்கி கெளசலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கூட படங்களில் பிஸியாக நடித்தாலும், கர்ப்பமாக இருப்பதாகவும், விக்கியை விவாகரத்து செய்ய போவதாக மற்றொரு பக்கமும் வதந்திகளில் அடிபட்டு வருகிறார் கத்ரினா.
தங்களுக்கு விருப்பமான நடிகர், நடிகைகளை கடவுளாக வைத்து வழிபடும் பழக்கம் சினிமா ரசிகர்களிடம் காலம் காலமாக இருப்பது தான் என்றாலும், கத்ரினாவை கடந்த 10 ஆண்டுகளாக பெண் தெய்வமாக நினைத்து பூஜை செய்து வந்துள்ளனர் அரியானாவை சேர்ந்த ஒரு தம்பதி.
அரியானாவின் சர்கி தாத்ரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் - பந்து என்ற தம்பதி, நடிகை கத்ரினா கைஃபை தெய்வமாக நினைத்து தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்களாம். கத்ரினாவை ஒரு நாளாவது சந்திக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே ஆசையாம். இவர்களின் வீட்டில் எங்கு பார்த்தாலும் கத்ரினாவின் போட்டோ தான் உள்ளது.
வீட்டிற்கு உள் மட்டுமல்ல வீட்டிற்கு வெளியில் பார்த்தாலும் கத்ரினாவின் போட்டோ தான் உள்ளது. கத்ரினா மீது இவர்கள் வைத்துள்ள தீராத காதல் அந்த ஊருக்கே தெரியும். 2004 ல் கத்ரி நடித்த படத்தை பார்த்த பிறகு பந்து அவரின் தீவிர ரசிகை ஆகி விட்டாராம். அன்று முதல் கத்ரினாவை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பது தான் அவரின் கனவாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் கத்ரினாவின் படங்களை வீடு முழுவதும் வைக்க பந்துவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு வாய்த்த கணவரும் கத்ரினாவின் அதிதீவிர ரசிகராக அமைந்து விட்டார். சிறிது நாட்களில் இருவருமே கத்ரினாவின் தீவிர பக்தர் ஆகி விட்டார்களாம். கத்ரினாவின் திருமணம், அவரது பிறந்த நாளில் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது, கேக் வெட்டுவது அனைவருக்கும் லட்டு கொடுப்பது என கொண்டாடி வருகிறார்கள்.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}