ஹரியானா கலவரம்.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

Aug 02, 2023,02:29 PM IST
குர்கிராம் : ஹரியானாவில் இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி உள்ளது. இந்த கலவரம் டெல்லியிலும் பரவ வாய்ப்புள்ளதால், அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹரியானாவில் சமீபத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இது தொடர்பாக இரு மததத்தினர் இடையே நடந்த மோதல், கலவரமாக மாறி உள்ளது. ஹரியானாவின் பல மாவட்டங்களிலும் வன்முறை சம்பவங்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை இரண்டு போலீசார் உள்ளிட்ட 5 பேர் கொள்ளப்பட்டுள்ளனர். 30 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

சில்லறை விலைக்கு யாரும் பெட்ரோல், டீசல் விற்கக் கூடாது. அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கடைகள், குடியிருப்பு பகுதிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது.

சமூக வலைதளங்களில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன என பல தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என போலீசார் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். நான்கு நாட்களாகியும் அரியானாவில் இதுவரை பதற்றம் குறையவில்லை. 

அரியானாவின் நுஹ் பகுதியில் ஏற்பட்ட இந்த கலவரம் தேசிய தலைநகரான டில்லியில் இருந்து 20 கி.மீ., தூரத்திலேயே அமைந்துள்ளதால் டில்லியிலும் கலவரம் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் டெல்லி - ஃபரிதாபாத் சாலையை தடுப்புக்களால் தடுத்து வைத்துள்ளதால் இதன் மூலமாக கலவரம் உச்சகட்டத்தை எட்டும் என்பதால் டில்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்