டிகிரி முடிச்சிருக்கீங்களா?... ஏர்போர்ட்டில் வேலை இருக்கு... மே 24 வரை விண்ணப்பிக்கலாம்!

Apr 23, 2025,02:37 PM IST

சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்திய விமான நிலைய ஆணையம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள 137 விமான நிலையங்களை இந்த விமான நிலைய ஆணையமே நிர்வகித்து வருகிறது. இதில் பணி புரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது  இங்கு காலியாக உள்ள 309 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இங்கு பணி புரிய பி.எஸ்.சி, இயற்பியல், கணிதம் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில்  என்ஜினியரிங் பட்டம் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் எழுத மற்றும் பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளுக்கும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் வயது தளர்வுகள் உண்டு. அது மட்டும் இன்றி பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும், எஸ்சி பிரிவினர் என்றால் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.




ஜூனியர் எக்ஸியூட்டிவ் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளமாக  வழங்கப்படும். இதற்கான தேர்வுகுள் கணிணி வாயிலாக நடத்தப்படும். அதன்பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு, குரல் பரிசோதனை, மனோவியல் சோதனை, உளவியல் மதிப்பீடு, உடல் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்படும்.


இத்தேர்விற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்டி, எஸ்சி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரருக்கு கட்டணம் கிடையாது. இந்த தேர்விற்கு மே 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்