- சுமதி சிவக்குமார்
புற்றுநோய் மற்றும் இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு அற்புதமான மருந்தாக நல்லதொரு ஜூஸ் இது. பேரீச்சம் பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம் மற்றும் கேரட், பீட்ரூட் போட்டு செய்யும் ஜூஸ் இது.
தேவையான பொருட்கள்:
பேரிச்சை பழம் -- 10
அத்திப்பழம் 3
கருப்பு உலர் திராட்சை -- 10 அல்லது 15
சிவப்பு உலர் திராட்சை -- 10
கருப்பட்டி சிறிதளவு
கேரட் -- கால் பகுதி
பீட்ரூட் -- கால் பகுதி
இதிலிருக்கும் சத்துகள்

பேரிச்சை பழம், அத்திப்பழம், சிவப்பு உலர் திராட்சை, கருப்பு உலர் திராட்சை மற்றும் கருப்பட்டி இவற்றில் உள்ள சத்துகள் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், போரான் தாதுக்கள் , ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின்கள் சி, பி அதிகம் இருப்பதால் இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பணுக்கள் அதிகரிக்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இரத்தம் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
செய்முறை
பேரிச்சை பழத்தை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் கேரட் பீட்ரூட் மேற்கண்ட அனைத்தையும் சேர்த்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இந்த கலவையுடன் கேரட் பீட்ரூட் சிறிதாக நறுக்கி போட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து தண்ணீர் சேர்த்து வெறும் வயிற்றில் 150 மில்லி அல்லது 200 மில்லி அளவு பருகவும்.
இதேபோல் ஜூஸ் தயாரித்து பிற்பகல் 3 மணி அளவில் ஒரு முறை பருகவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இது போல் பருகினால் நமது இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் குறைவதில்லை. இதனால் ஹீமோகுளோபின் அளவும் குறைவதில்லை.
ஹீமோகுளோபின் 10 க்கு மேல் இருக்கும் படி இந்த ஜூஸ் பார்த்துக் கொள்கிறது. பெரும்பாலும் புற்றுநோயாளிகளுக்கு ஹீமோகுளோபின் 8 க்கு மேல் இருந்தால் தான் கிமோதெரபி ஊசி அளிக்கப்படும் என்பது மருத்துவ விதி. எனவே புற்றுநோயாளிகள் இந்த ஜூஸ் பருகினால் அவர்களுக்கு ரத்தம் குறையாமல் 10 க்கு மேல் ஏறும் என்பதில் ஐயமில்லை.
இரத்த சோகை நோய் உள்ளவர்கள் இதை பருகினால் விரைவில் குணமாகும் என்பது உறுதி.
நானும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். 4 ஊசிக்கு பிறகு நானே கண்டுபிடித்து தயாரித்து குடித்து நல்ல பலன் கிடைத்ததால் தங்களுக்கும் தங்கள் உறவினர்களுக்கும் இந்த ஜூஸ் கொடுத்து உதவி செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
எந்த நோயாக இருந்தாலும் வாழ்க்கையில் போராடி தான் நோயை வெல்ல வேண்டும் என்பதே நமது முதல் இலக்கு...!!
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்
PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
{{comments.comment}}