ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலை உணவை கண்டிப்பாக தவிர்க்க கூடாது என ஏற்கனவே டாக்டர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதைச் சாப்பிடும் நேரமும் முக்கியம். குறிப்பாக, காலை உணவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? ஏன் அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள நிறுவனம் (INRAE) நடத்திய ஆய்வில், காலை உணவை சீக்கிரம் (குறிப்பாக 8 மணிக்கு) சாப்பிடுவது இதய நோய்க்கான ஆபத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவை ஒவ்வொரு மணி நேரம் தாமதப்படுத்தும் போதும், இதய நோய் ஏற்படும் அபாயம் 6% அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு டாக்டர்கள் சொல்லும் 4 காரணங்கள் :

1. இரத்த சர்க்கரை அளவு: காலை 8 மணிக்கு உணவை உட்கொள்வது உங்கள் உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இது நாள் முழுவதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
2. உடல் வளர்சிதை மாற்றம் (Metabolism): காலை 8 மணிக்குச் சாப்பிடுவது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. இது தேவையற்ற உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
3. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம்: காலை 9 மணிக்குப் பிறகு காலை உணவைச் சாப்பிடுபவர்களுக்கு, டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
4. இரவு உணவோடு தொடர்பு: காலை உணவை 8 மணிக்குச் சாப்பிடுவது போல, இரவு உணவை 8 மணிக்குள் முடிப்பதும் சிறந்தது. இது இரவு நேர உபவாச காலத்தை (Fasting period) அதிகரித்து, செரிமான மண்டலத்திற்குப் போதிய ஓய்வு அளிக்கிறது.
உங்கள் உடல் கடிகாரத்தின் (Circadian Rhythm) படி, காலை 8 மணி என்பது உங்கள் உடல் உணவை ஏற்றுக் கொண்டு ஆற்றலாக மாற்றத் தயாராக இருக்கும் மிகச்சிறந்த நேரமாகும். எனவே, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் காலை 8 மணிக்குள் உணவைச் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}