ஸ்.. அப்பா இப்பவே கண்ண கட்டுதே... அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை மையம்

Apr 23, 2024,04:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இப்பவே வீட்ட விட்டு வெளியில போக முடியல. வெயிலுக்கு எத்தன தடவை குளித்தாலும் போட்ட சட்டை எல்லாம் நனைந்து போகுது. வெயிலால் தூக்கமும் போச்சு என்று பலர் தற்பொழுது அடிக்கும் வெயிலுக்கே புலம்பி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் வேறு அறிவித்துள்ளது. என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் பொதுமக்கள் அடிக்கும் வெயிலுக்கு சூரிய பகவானை திட்டி தீர்த்து வருகின்றனர்.




இந்நிலையில், சென்னை வானிலை மையம் என்ன அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று பார்ப்போமா? இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடுமாம். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. 


கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், தர்மபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 41.2 டிகிரி செல்சியஸ், திருத்தணி மற்றும் திருப்பத்தூரில் 40.8 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில்  40.7 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.3 டிகிரி செல்சியஸ், மதுரை நகரில் 40.2 டிகிரி செல்சியஸ் பதிவானது.


கோயமுத்தூர் விமான நிலையம் மற்றும் நாமக்கல்லில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 23 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.


அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:


குமரி கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 


ஏப்ரல் 23 முதல் 25 வரை:


தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


ஏப்ரல் 26 முதல் 29 வரை:


தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


அடுத்து ஐந்து நாட்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை:


ஏப்ரல் 23 முதல் 27 வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறையும்.


வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:


ஏப்ரல் 23,24 ஆகிய இரு நாட்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசப்படும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்று சென்னை வானிலை தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்