மண்ட பத்திரம் மக்களே.. 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும், 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம்

Apr 24, 2024,06:14 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும்  வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்  எனவும், அப்போது இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


ஐயோ, கடவுளே பகல் நேரத்தில் தான் வெயில் வெளுத்தெடுக்குது நைட்டாவது நிம்மதியா தூங்குவோம் என்று நினைத்தால் நைட் எல்லாம் வேர்த்து வேர்த்து தூக்கமே போச்சு.. காலைல தூங்கணும்னு நினைச்சா கூட நேரம் ஆயிடுச்சு எந்திரி எந்திரி என்று சொல்கிறார்கள். இந்த வெயில்னால தூக்கம் போச்சு.. நிம்மதி போச்சு ..எல்லாம் போச்சு.. தலை வலிக்குது.. எப்ப தான் இந்த வெயில் காலம் முடியுமோ என  மக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.  அந்த அளவுக்கு வெளுத்தெடுக்குது சார் இந்த வெயில்!




நம்ம ஊரைத் தூக்கிட்டுப் போய் சூரியனுக்கு பக்கத்துல மாத்தி வச்சுட்டாங்களோன்னு சந்தேகம் கூட வருதுங்க.. அப்படி ஒரு வெப்பம். 

ஏற்கனவே இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ்  வரை வெப்பநிலை உயரும் என அறிவித்த நிலையில் இந்த வெயிலையே மக்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் தலைவலி, அஜீரணம், வயிற்றுக் கோளாறு, உள்ளிட்ட பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இனி வரும் தினங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனை எவ்வாறு எதிர் கொள்ள  போகிறோமோ என மக்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.


24.4.2024 மற்றும் 25.4.2024:


அதிகபட்சமாக வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட வெப்பநிலை  மூன்று முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  35- 42 டிகிரி செல்சியஸும், இதர மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35- 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.


குறிப்பாக இன்றும், நாளையும் வட தமிழகம், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


26.4.2024 முதல் 28.4.2024 வரை:


அதிகபட்சமாக வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-4  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 38- 41 டிகிரி  செல்சியஸும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 -38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.


இது தவிர காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதமாகவும், மற்றும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.


26.4.2024 முதல் 30.4.2024 வரை:


தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிலவக்கூடும்.


சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 -38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்