அலர்ட்டா இருங்க மக்களே... இன்று 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசுமாம்: வானிலை மையம் தகவல்

Apr 25, 2024,11:06 AM IST

சென்னை: தமிழ்நாட்டில்  இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்ப  அலை வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு வெயில் தனது உக்கிரத்தை காண்பித்து வருகிறது. காலை நேரங்களில் அடிக்கும் வெயிலின் தாக்கத்தையே தாங்க முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காண்பித்து வருகின்றனர். பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும்  வெப்பம்  காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபரான்ஹீட்டும்,வேலூரில் 106.88 டிகிரியும், சேலத்தில் 105.98 டிகிரியும்  வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று   வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கடும் எனவும், இயல்பை விட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும். இன்று திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.


அதனைத் தொடர்ந்து நாளை முதல் 28ஆம் தேதி வரை திருப்பத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனினும் தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மலைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று  தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்