சென்னை: தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதன்படி தமிழகத்தில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் மாலையிலும் இரவு நேரங்களிலும் நல்ல மழை பெய்தது. குறிப்பாக திருப்பூர், சேலம், திண்டுக்கல், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் சற்று தணிந்து குளுமை நிலவியது. ஆனால் தென் தமிழகப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை, நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை கனமழை:
கோவை,வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கனமழை:
கோவை,நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்:
மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக இன்று முதல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தளவு அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது.. பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது!
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
{{comments.comment}}