"ஹலோ துபாயா".. என்னதிது ..ஊரே இப்படி மிதக்குது.. கொட்டித் தீர்த்த பேய் மழை.. !

Nov 17, 2023,06:49 PM IST

துபாய்: துபாய் என்றதும் வழுக்கிக் கொண்டு போகும் சாலைகளைத்தான் நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.. ஆனால் அந்த துபாயின் சாலைகள் முழுக்க தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி தரும் வீடியோக்களைப் பார்த்து பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை அங்கு பெய்த பேய் மழையில் ஊரே வெள்ளக்காடாகி விட்டது.


துபாய் என்றதுமே.. எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது "ஹலோ துபாயா" என்ற வடிவேலுவின் காமெடிக் காட்சிதான். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது துபாய்க்குப் போய் விட வேண்டும் என்று ஆசை இருக்கும். அந்த அளவுக்கு மக்களின் மனம் கவர்ந்த சர்வதேச நகரங்களில் துபாயும் ஒன்று.


அட்டகாசமான துபாய் நுகரம் இன்று பெரும் மழையில் சிக்கி மிதக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பேய் மழையும், கூடவே இடி மின்னலும் சேர்ந்து துபாய் மக்களை மிரட்டி விட்டது. ரஸ் அல் கைமா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து விட்டது. பெரும்பாலான சாலைகள் வெள்ள நீரில் மிதந்தன.




வாகனப் போக்குவரத்து இதனால் கடும் பாதிப்பை சந்தித்தது. மக்கள் கவனமாக இருக்குமாறும், வாகனங்களுடன் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.  மேலும் மழை நீரில் வாகனங்களை செலுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


அபு ஹெய்ல் என்ற இடத்தில் பலத்த காற்றுடன் வீசிய கன மழை தொடர்பான வீடியோ பார்க்கவே அச்சுறுத்தலாக உள்ளது. அந்த அளவுக்கு பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை அது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் எல்லாம் நீரில் மிதப்பது போலவே இருக்கிறது.




மழை தொடரும் என்றும் துபாய்க்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது. மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்