டெல்லி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவலாக பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கிட்டத்தட்ட முக்கால்வாசி இந்தியாவில் மழை பெய்து வருவது மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.
இந்தியாவில் ஒருசில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, இந்தியாவில் வடக்கு தெற்காக பருவமழை மாறி மாறி பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கேரளா மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளில் தற்போது வரை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதேபோல் வடக்கே டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, பிறகு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அனைத்து ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகள் நிரம்பி, அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, காரைக்கால் கர்நாடகாவில் பரவலாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கன முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அப்போது 7 முதல் 12 சென்டிமீட்டர் வரை மழை செய்வதற்கான வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டிற்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் கேரளாவுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கர்நாடகாவிற்கு இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், ஒரு சில இடங்களில் கன மழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா ஆகிய பல மாநிலங்களில் இன்று கன முதல் அதீத கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதிகளில் கனமழைக்கான எல்லோ நிற எச்சரிக்கையும், மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்கில் மிகப்பெரிய அளவிற்கு மழை கிடையாது. குறிப்பாக ஜம்மு, காஷ்மீர், பஞ்சாபில், மழை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
{{comments.comment}}