ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மிக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
வங்காள விரிகுடா கடலின் மேற்கு மத்திய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கம்மம், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் கம்ம்ம் மாவட்டத்தில் இதுவரை 52 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதன் எதிரொலியாக குடியிருப்பு பகுதிக்குள் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 110 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் கிருஷ்ணா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பலத்த மழை காரணமாக ஹைதராபாத் சுற்றியுள்ள நீர்நிலைகளில் முழுவதும் வேகமாக நிரம்பி வருகிறது. புளிச்சந்லா அணையில் இருந்து வினாடிக்கு 6,53,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.

பேரிடர் மீட்பு குழு:
மழையால் கடும் சேதத்தை சந்தித்த கம்மம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்னை, விசாகப்பட்டினம், மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தலா மூன்று பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
15 ரயில் சேவைகள் ரத்து:
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னைக்கு வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நாளை இரவு புறப்படும் அகமதாபாத் டூ சென்னை சென்ட்ரல் நவஜீவன் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் டூ ஷாலிமர் கோரமண்டல் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் செப்டம்பர் 6 தேதி மைசூரில் இருந்து ஹவுராக்கு செல்லும் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் விஜயவாடா மற்றும் காசிபேட் இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் 15 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆந்திரா தெலங்கானாவில் மொத்தமாக 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானாவில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு:
இந்த நிலையில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தெலுங்கானாவில் அதிலாபாத் நிஷாமாபாத், கமாரெட்டி, மகபூபாபாத் நாராயணபேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதேசமயம் கனமழை காரணமாக தெலுங்கானாவில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆடி அசைந்து வரும் டித்வா புயல்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்.. யாருக்கு ரெட்?
டிட்வா புயலால் நமக்கு மழை எப்படி இருக்கும்.. கலைஞர் ஸ்டைலில் பதில் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!
ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!
ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!
இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்
மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும் என்றும் அதிமுக தான்...ஜெயக்குமார் உறுதி!
கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்
அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!
ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு
{{comments.comment}}