சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்றும் இன்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரத்தில் 11 சென்டிமீட்டர் மழையும், விருதுநகர், திருநெல்வேலி, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் தலா 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் சீர்காழி, வத்தலகுண்டு, நாகை, திருக்கோவிலூர், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதேபோல் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவு வருகிறது.

இந்த நிலையில், பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கிந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் இருந்து தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோல் குமரி கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி
இன்று கனமழை:
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று மிதமான மழை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
13.3 2025 முதல் 18.3.2025 வரை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}