சென்னை: தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தில் தகித்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தேர்தல் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முக்கிய விளக்கமளித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாமக எந்த அணியுடன் இணையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வரும் சூழலில், "கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார். மேலும், "நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது" என்ற தத்துவார்த்தமான கருத்தைப் பகிர்ந்துள்ள அவர், கட்சியின் நலன் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் பணிகளில் பாமக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இது குறித்துப் பேசிய ராமதாஸ்:
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கி உள்ளது. இந்த நேர்காணல் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். திறமையான மற்றும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்வதே இந்த நேர்காணலின் முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என டாக்டர் ராமதாசே கூறுகிறார். என்டிஏ கூட்டணியில், மகன் அன்புமணி இருப்பதால் அங்கு செல்ல முடியாது என பிடிவாதமாக இருக்கிறார், ராமதாஸ். திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்றால் அங்கு ராமதாசின் வருகைக்கு திருமாவளவன் எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் தவெக பக்கம் செல்வாரா என்றால், ராமதாசின் அரசியல் மற்றும் வயது முதிர்ச்சிக்கு இளைஞர் பட்டாளம் இருக்கும் தவெக கூட்டணியில் சேர்ந்தால் அது சரியாக இருக்காது. தனித்து போட்டியிடுவாரா என்றால், அதற்கும் வாய்ப்பு குறைவு தான்.
இவை அனைத்தும் ஒரு புறம் இருந்தாலும், ராமதாஸ் எந்த கூட்டணிக்கு சென்றாலும் எந்த சின்னத்தில் அவர் போட்டியிடுவார் என்ற கேள்டி உள்ளது. மாம்பழ சின்னமும் கட்சியும் அன்புமணியிடம் தான் உள்ளது என தேர்தல் கமிஷன் சொல்லி உள்ளது. ஆனால் அதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை என்னும் பட்சத்தில் ராமதாஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த சூழலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு நேர்காணல் எதற்காக நடத்துகிறார்? ராமதாசின் தேர்தல் திட்டம் தான் என்ன? என தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். நேர்காணலுக்கும் வந்தவர்களுக்கும் இதே சந்தேகம் உள்ளது.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}