தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில்.. இன்று முதல் மார்ச் 1 வரை.. கனமழைக்கு வாய்ப்பு..!

Feb 27, 2025,12:07 PM IST

சென்னை: கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில் திடீரென வானிலை மாற்றம் காரணமாக மழை மேகங்கள் சூழ்ந்து கடந்த இரண்டு நாட்களாகவே மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நெல்லை, கோவை, மதுரை, ராமநாதபுரம்,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தென் தமிழகத்திலும், டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதன்படி,  இன்று கன மழை: 



தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கனமழை:

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ,தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 12 மாவட்டங்களில் நாளை  கன மழைக்கு வாய்ப்புள்ளது.

மார்ச் 1, கனமழை: 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மழை:

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கடிதம்:


இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள கடிதத்தில், 


நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கான உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

news

வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

news

CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்

news

4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

news

பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!

news

ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

news

பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?

news

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்