சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் அடுத்த மூன்று நாட்கள் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்னி நட்சத்திர காலகட்டம் என்றாலே அய்யோ இந்த வெயிலை எப்படித்தான் சமாளிக்க போகிறோமோ என புலம்பும் மக்கள் மத்தியில் பருவம் தவறி தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது நாளை காலை வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இதனால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், கேரளா கடலோரப் பகுதிகள், கேரள கர்நாடகா கடல் பகுதிகள், மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறாவளி காற்று வீச கூடும்.குறிப்பாக மே 23ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை வங்கக் கடலில் வட திசையில் சூறாவளி காற்று வீச கூடும். இதனால் கடலோரப் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று மிக கனமழை:
தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரியில் செம மழை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை வெளுத்து வாங்கியது. அங்கு கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரியில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மைலாடியில் 14 சென்டிமீட்டர் மழை பதிவானது. குருந்தன் கோட்டில் 9 சென்டிமீட்டர், கொட்டாரம், தக்கலை மாம்பழதுறையாறில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
{{comments.comment}}