"முடி" இப்படி கொட்டுதே.. இதுக்கு முடிவே இல்லையா.. அட சூப்பர் சொலூஷன் இருக்கு!

Jul 14, 2023,01:50 PM IST

- மீனா


எடுக்க எடுக்க வரும் அட்சயபாத்திரம் போல.. முடி இப்படி கொட்டிட்டே இருக்கே.. முடி கொட்டும் பிரச்சனைக்கு முடிவே இல்லையா என்று நினைக்கிறீர்களா.. அப்ப இது உங்களுக்கு தான். 


முடி கொட்டும் பிரச்சனை என்பது இன்று எல்லாரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. முன்பெல்லாம் பெண்கள்தான் அச்சச்சோ முடி கொட்டுதே என்று புலம்புவாங்க.. ஆனால் இன்னிக்கு நிலைமை வேற லெவலுக்குப் போயிருச்சு.. பெண்களுக்கு மட்டும் இல்லை, இன்று அநேக ஆண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. அதே மாதிரி ஆண்களுக்கு முடி கொட்டி சீக்கிரத்தில் வழுக்கையாகுமோ என்று பயம் இருப்பது போல பெண்களுக்கும்  இந்த மாதிரி பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற பயமும் உள்ளத்தில் இருக்கிறது. 




அந்த காலத்தில் நம் வீட்டுப் பெண்களின் முடியை பராமரிப்பதற்கு வீட்டில்  உள்ள பாட்டிமார்கள் தான் கை கொடுப்பார்கள். அதில் அவர்கள் திறமைசாலிகளாகவும் பொறுமைசாலிகளாகவும் இருந்து நமக்கு முடி கொட்டாமலும், எப்படி முடியை கருகருன்னு பராமரிக்கலாம், வளர்க்கலாம் என்று யோசித்து அதற்கான வழிமுறைகளை செய்து கொடுத்தார்கள். இதனால்தான் அந்தக் காலத்துப் பெண்கள் கார் கூந்தல் அழகிகளாக திகழ்ந்தார்கள்.


ஆனால் இன்று நாம் திறமைசாலிகளாக இருந்தாலும் முடியை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நமக்கு பொறுமையும், நேரமும் இல்லை. அட ஆமாங்க இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று நினைக்கிறீங்க தானே. தெரியுங்க  நானும் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டதினால், அதை உங்க கூட பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் வந்து இருக்கேன். 


தலைமுடியை அதிகம் கொட்டாமல் பார்த்துக் கொள்ள அருமையான, எளிமையான வழி இருக்கு.. அதுதான் "ஹெர்பல் ஹேர் ஆயில்".  இந்த ஹெர்பல் ஹேர் ஆயில் செய்வதற்கு இரண்டு விதமான எண்ணெய்களை நாம் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் இது போதும். இந்த எண்ணெய்கள் இரண்டையும் சூடாக்கிக் கொண்டு வெந்தயம், கறிவேப்பிலை, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, கருஞ்சீரகம் ,சின்ன வெங்காயம் ,வேப்பிலை, நெல்லிக்காய், சோற்றுக்கற்றாழை, இவற்றையெல்லாம் அரைத்து எண்ணெயுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும். 


காய்ச்சின எண்ணெயை சூடு ஆறியவுடன் அப்படியே ஒரு மூடி போட்டு இரவு முழுவதும் வைத்துவிட்டு பிறகு பாட்டிலுக்கு மாற்றிக் கொள்ளலாம். தலைக்கு குளிக்க போறதுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணையை நன்கு தேய்த்து மசாஜ் செய்து பிறகு ஷாம்பு போட்டு தலையை அலசி க் கொள்ளலாம். அப்புறம் பாருங்க முடி கொட்டின பிரச்சனைக்கு முடிவு உண்டான சந்தோஷம் உங்க முகத்தில் தெரியும். 


சரி, ஹெர்பல்  ஹேர் ஆயில் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னன்னு பார்க்கலாமா!


தேங்காய் எண்ணெய் -500 மில்லி,

விளக்கெண்ணெய்- 100 மில்லி

வெந்தயம் -2 ஸ்பூன்

செம்பருத்தி பூ- 10

செம்பருத்தி இலை-கைப்பிடி அளவு

கருஞ்சீரகம் -1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் -10

வேப்பிலை -10  இலைகள்

விதை நீக்கிய நெல்லிக்காய் -5

சோற்றுக் கற்றாழை-சிறிய துண்டு.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்