ஆப்பிள் ஸ்டோர்: இந்தியாவில் 2 .. உலகம் பூராவும் எத்தனை கடை இருக்கு தெரியுமா?

Apr 26, 2023,04:48 PM IST
டெல்லி: அமெரிக்காவில் தொடங்கி லேட்டஸ்டாக இந்தியா வரை வந்துள்ள ஆப்பிள் ஸ்டோர், உலகம் முழுவதும் 525 கிளைகளைக் கொண்டுள்ளது.

1976ம் ஆண்டு மிக சாதாரணமான முறையில் தொடங்கியதுதான் ஆப்பிள் கதை. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் ஒஸ்னியாக் ஆகியோர் இணைந்து ஆப்பிளின் பயணத்தைத் தொடங்கினர். இன்று டிம் காக் தலைமையில் ஆப்பிள் நிறுவனம் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக உயர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

உலக அளவில் இன்று அதிகம் பேர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள், செல்போன்களை ஆப்பிள்தான் தயாரிக்கிறது. ஆப்பிள் தயாரிப்பு ஒன்றை வைத்திருந்தால் அது பெருமைக்குரியது என்ற அளவுக்கு அதன் பிராண்ட் பிரபலமாகியுள்ளது. ஆப்பிள் தயாரிப்புகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுக் கொண்டே செல்கின்றன என்பதும் இந்த பிராண்ட்டின் பிரபலத்தைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணமாகும்.



ஆப்பிள் நிறுவனத்திலிருந்து ஐபோன்கள், மேக் கம்ப்யூட்டர்கள், ஆப்பிள் வாட்ச், ஐபேட், ஆப்பிள் டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகின் முதல் ஆப்பிள்ஸ்டோர் அமெரிக்காவில் அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸால் 2001ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆரம்பத்தில்ஆப்பிள் தயாரிப்புகள் கிண்டலடிக்கப்பட்டன. அது எங்க வளரப் போகுது என்ற சாபங்களும் வந்து குவிந்தன. ஆனால் இன்று ஆப்பிள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அது வளர்ந்து விட்டது.

சமீபத்தில் இந்தியாவில் 2 ஆப்பிள்ஸ்டோர்களை அதன் சிஇஓ டிம் குக் திறந்து வைத்தார். முதலில் மும்பையிலும், அடுத்த கிளை டெல்லியிலும் தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்திற்கு 525 ஸ்டோர்கள் உள்ளன.

அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 272 கிளைகள் உள்ளன. சீனாவில் 46 ஸ்டோர்கள் உள்ளன. இங்கிலாந்தில் 39,  கனடாவில் 28,  ஆஸ்திரேலியாவில் 22 ஸ்டோர்கள் உள்ளன. பிரான்சில் 20,  இத்தாலியில் 17,  ஜெர்மனியில் 16,  ஸ்பெயினில் 11,  ஜப்பானில் 10 கிளைகள் ஆப்பிளுக்கு உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கு மிகவும் தாதமாக வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது 2 ஸ்டோர்களைத் திறந்துள்ள போதிலும் விரைவில் பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் ஆப்பிள் ஸ்டோர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்