Sugar symptoms.. உங்களுக்கு சர்க்கரை நோய் வர போகிறது என்பதற்கான Prediabetic அறிகுறிகள்

Dec 17, 2024,05:44 PM IST

இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவுப் பழக்கங்களால் சமீப ஆண்டுகளில் மிகவும் அதிகரித்து வரும்  நோய்களில் ஒன்று தான் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய். இதில் பல வகைகள் உள்ளன.  சர்க்கரை நோய் வந்து விட்டது என்றால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நமக்கு சர்க்கரை நோய் வரப் போகிறது, அதற்கான ஆபத்து விளிம்பில் நாம் இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் பற்றி இன்ற தெரிந்து கொள்ளலாம்.


சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் :




1. அதிகமாக தாகம் எடுப்பது - தண்ணீர் குடித்த பிறகும் கூட அடிக்கடி தாகம் எடுக்கிறது என்றால் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அர்த்தம்.


2. அதிகமான சிறுநீர் வெளியேற்றம் - அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகப்படியான சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறுநீரங்களில் அதிகப்படியான க்ளூகோஸ் உறிஞ்சப்பட்டு, சிறுநீர் வெளியேறுகிறது என்று அர்த்தம்.


3. அதிகமான பசி - வழக்கமான சாப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகும் கூட பசி உணர்வு இருந்து கொண்டே இருப்பது. உடலில் இன்சலின் அளவு, முறையற்ற க்ளூகோஸ் உறிஞ்சப்படுவதால் இது ஏற்படலாம்.


4. சோர்வு - அடிக்கடி சோர்வு எடுப்படுவதும் சர்க்கரை நோய் ஏற்பட போவதற்கான அறிகுறியாகும். உடலில் உள்ள சர்க்கரை ஆற்றலாக மாற்றப்படும் தன்மை பாதிக்கப்படும் போது இது போன்ற சோர்வு ஏற்படலாம்.


5. கண் பார்வை மங்குதல் - ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் கண்ணில் உள்ள லென்ஸ் பாதிக்கப்பட்டு, கண் பார்வை மங்க துவங்கும்.


6. தோலில் கருப்பு திட்டுக்கள் - உடலில் கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு பகுதிகளில் நிறமாற்றம் ஏற்றபட்டு கருப்பு நிற திட்டுக்கள் ஏற்பட்டால் இன்சுலின் அளவு பாதிக்கப்படுவதற்கான அறிகுறியாகும்.


7. மெதுவாக ஆறும் காயம் - ரத்தம் வெளியேறும் போது க்ளூகோஸ் அளவு பாதிக்கப்படுவதால் உடலில் காயம் ஏதாவது ஏற்பட்டால் மிகவும் மெதுவாக ஆறுவதும் சர்க்கரை நோய் வரப் போவதற்கான அறிகுறியாகும்.


8. நரம்பு பாதிக்கப்படுதல் - சர்க்கரை நோயின் ஆரம்ப நிலை நரம்புகள் பாதிப்பு ஆகும். குறிப்பாக கை கால்களில் கூச்ச உணர்வு அல்லது உணர்வு இல்லாமல் மரத்துப் போகுதல் போன்ற உணர்வு ஏற்படலாம்.


9. உடல் எடையில் மாற்றம் - உடலானது இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த முடியாமல்  தடுமாறும் போது உடல் எடை திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மணக்கும் மலர்கள்.. மயக்கும் மழலைகள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 14, 2025... இன்று நல்ல காலம் பிறக்கிறது

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!

news

மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சி தந்த அதிர்ச்சி!

news

பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

news

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!

news

இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!

news

பெற்று வளர்த்த தாய்மடி

அதிகம் பார்க்கும் செய்திகள்