Cooking Tips.. இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையான .. கடாய் காளான் கிரேவி!

Dec 03, 2024,03:51 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: இட்லி, தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ்தான் ரொம்ப முக்கியம். சரியான சைட் டிஷ் கிடைத்தால் கூடுதலாக ஒன்றிரண்டு உள்ளே தள்ள முடியம். அப்படிப்பட்ட சூப்பரான சைட் டிஷ்ஷைத்தான் இப்ப பார்க்கப் போறோம்.


அதுதான் கடாய் காளான் கிரேவி. சூப்பரானது சுவையானது அதை விட முக்கியமாக ஹெல்த்தியானது. வாங்க பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :




1.காளான் - 200 கிராம் (கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்த நீரில் நன்றாக கழுவவும்)

2. பெரிய வெங்காயம் - 2

3. பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ - தலா 2

4. தக்காளி - 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்)

5. இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

6. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்

7. மல்லித்தூள் - 1 ஸ்பூன்

8. சீரகத்தூள், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

9. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

10. காஷ்மீரி மிளகாய் தூய் - 1/2 ஸ்பூன்

11. எண்ணெய் - 2 ஸ்பூன்

12. கஸ்தூரி மெதி - சிறிதளவு

(உப்பு, காரம் தேவைக்கு ஏற்ப)


செய்முறை :


1. அடி கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


2. நன்றாக வதக்கிய பிறகு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.


3. அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், நறுக்கிய காளான் ஆகியவற்றை சேர்க்கவும்.


4. எண்ணெய் 1/2 ஸ்பூன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.


5. அவற்றோடு கரம் மசாலா தூள் சேர்த்து, கிரேவி நன்றாக திரண்டு வந்து, காளான் வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும்.


6. கடைசியாக கஸ்தூரி மேதியை கையில் நசுக்கி தூவி விட்டு கிளறினால் கம கம காளான் கிரேவி ரெடி.


7. இந்த கடாய் காளான் கிரேவி இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


நன்மைகள் :


1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

2. காளானில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அழற்சி எதிர்ப்பை அளிக்கின்றன.

3. கொழுப்பைக் குறைக்கும்.

4. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

5. வைட்டமின் டி, வைட்டமின் பி6, செலினியம் காளானில் அதிகம் உள்ளது.

6. எடை இழப்புக்கு உதவும்.

7. மூளை ஆரோக்கியம், குடல் ஆரோக்கியம் மேம்படும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக

news

தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!

news

முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

news

கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

news

தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?

news

அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை

news

கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

news

முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்