சென்னை: சென்னையில் மனைவியின் 25ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்கரிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மனைவியின் கண்முன்னே கணவர் துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் அகஸ்டின் பால். இவருக்கு வயது 29. சொந்தமாக பார்சல் சர்வீஸ் தொழிலை நடத்தி வருபவர். இவருடைய மனைவியின் பெயர் கீர்த்தி. இவருக்கு வயது 25. இந்த தம்பதியர் இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன.

அகஸ்டின் பாலின் மனைவி கீர்த்திக்கு 25வது பிறந்த நாள் வந்துள்ளது. மனைவி மீது ரொம்பப் பாசமாக இருந்தவரான பால் இதை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்காரம் செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்திலேயே துடி துடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது பிறந்த நாளில், தனது கண் முன்பாகவே கணவர் துடிதுடித்து உயிரிழந்தது கீர்த்தியை அதிர வைத்து விட்டது. கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆறுதல் கூறினர். அந்தப் பகுதியே இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது.
எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனை பிறந்த நாளன்று கணவர் இப்படி இறந்தது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}