ஹைதராபாத்: ஹைதராபாத் தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ஹைதராபாத் காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஆஜரானார்.
புஷ்பா 2 படம் ரிலீஸானபோது ஹைதராபாத் சந்தியா தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார் அல்லு அர்ஜூன். அவரது வருகையால் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் கூடியதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் அவர் காரில் ஏறி ரசிகர்களிடையே ரோடு ஷோ போல நடத்தியதால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது. இதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பரிதாபாக கூட்டத்தில் மிதிபட்டு உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறான்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். இதில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அவருக்கு கோர்ட் ஜாமின் அளித்தது. இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார் அல்லு அர்ஜூன்.

இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ள அல்லு அர்ஜூனை கடுமையாக விமர்சித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் அனுமுலா, சட்டசபையில் பேசியிருந்தார். கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த தகவலைத் தெரிவித்தும் கூட தியேட்டரை விட்டு வர முடியாது என்று பிடிவாதம் பிடித்தார் அல்லு அர்ஜூன். கைது செய்ய நேரிடும் என்று போலீஸார் எச்சரித்த பிறகே அவர் வெளியே வந்தார். என்ன மாதிரியான மனிதர் இவர் என்று முதல்வர் ரேவந்த் அனுமுலா கடுமையாக பேசியிருந்தார்.
இதற்கு செய்தியாளர்களைக் கூட்டி விளக்கம் அளித்திருந்தார் அல்லு அர்ஜூன். இந்த நிலையில் இன்று அவரை விசாரணைக்கு வருமாறு ஹைதராபாத் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் முற்பகல் 11 மணிக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் அல்லு அர்ஜூன் நேரில் ஆஜரானார். அவரிடம் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.
ஜாமின் ரத்தாகுமா?
இதற்கிடையே, அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுக காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் சிவி ஆனந்த் கூறுகையில், சட்டக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அல்லு அர்ஜூனுக்கு எதிரான பல்வேறு வீடியோ ஆதாரங்களையும் காவல்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்பதால் அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கைகளை காவல்துறை மேலும் இறுக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிரிங்க சிரிங்க.. நல்லா சிரிங்க.. Laughter is the best medicine!
அக்னி சிறகுகள்.. சிந்தனைக்கு தீப்பொறி கொடுத்த வாழ்க்கை வரலாறு
வெற்றியின் ஒளி!
உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
உணவும் , வளமும், வாழ்வாதாரமும்.. பின்னே மக்காச்சோளமும்!
இதயத்தை செதுக்கி.. தடுமாறாமல் வழிகாட்டி.. A Teacher Is More Than a Teacher
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
{{comments.comment}}