நான் ஏற்கனவே சிஎம்.. உன்னால இப்போ பிஎம் ஆயிட்டேன்.. ஷோபா சந்திரசேகரின் கலகல பேச்சு!

Aug 22, 2024,05:02 PM IST

சென்னை:  வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் CM (celebrity mother) இப்போ நான் PM (proud mother) என்று விஜய்யின் அம்மா ஷோபா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.


தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரியில் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை தொடங்கினார். 2026ம் ஆண்டு வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூட வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த கட்சி பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கட்சியின் அடுத்த படியாக இன்று விஜய் தனது தவெக கட்சியின் கொடியினை அறிமுகம் செய்தார். இந்த கொடி அறிமுகத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னோட்டமாக மஞ்சள் நிறத்தில் விஜய் முகம் பொறித்த கொடி பறக்க விடப்பட்டது.




இன்று கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார் தவெக தலைவர். அதன்படி இன்று கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாய், தந்தை மற்றும் ஏராளமான கட்சி தொண்டர் என பலர் கலந்து கொண்டனர். விஜய் அறிமுகம் செய்து வைத்த கட்சி கொடிக்கு ஆதரவாக பலர் இணையதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் எதிர் மறையான பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பேசுகையில்,இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நீ நாட்டுக்கே ராஜா ஆனாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் CM (celebrity mother) இப்போ நான் PM (proud mother) என்று பேசியுள்ளார் ஷோபா சந்திரசேகர்.


இன்று நடந்த கொடி அறிமுக விழாவில் ஷோபா சந்திரசேகர் மிகுந்த பெருமையுடன், முகம் நிறைய பெருமிதத்துடன் பூரிப்புடன் மகனின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். மேலும் கட்சியின் பாடல் சூப்பராக இருப்பதாகவும் அவர் புஸ்ஸி ஆனந்த்தைப் பார்த்து தம்ப்ஸ் அப் காட்டி மகிழ்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்