லண்டன்: இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது கணுக்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கணுக்கால் காயம் காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியான. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் தான் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கிப்பட்டது. 33 வயதான முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடினார்.
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகப்கோப்பை தொடரின் போது அசத்தலாக பந்து வீசி அதிரடி காட்டியவர் ஷமி. அப்போது அவர் காயமடைந்த காரணத்தால், அதன்பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகியிருந்தார் ஷமி.
தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார் ஷமி. அதற்காக லண்டன் சென்று அவர் சிகிச்சை பெற்றார். சிறப்பு ஊசிகளையும் செலுத்திக்கொண்டார். இருப்பினும், அவர் பூரண குணம் பெறவில்லை என கூறப்பட்டது. இதை அடுத்து அவருக்கு விரைவில் கணுக்கால் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் முகமது ஷமி. மேலும் விரைவில் தனது சொந்த காலில் நிற்க ஆவலாக உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}