திருச்சி: அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சி மரக்கடை பகுதியில் துவங்கி பேசுகையில், அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன். நல்ல காரியங்களுக்கு ஒரு சில மண்ணைத்தொட்டால் நல்லதென பெரியவர்கள் சொல்வார்கள். அப்படி தான் திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை ஏற்படும் என்று வந்துள்ளேன். ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

1956 அறிஞர் அண்ணா தேர்தலில் நிற்க நினைத்ததும் திருச்சியில்தான். 1974-ல் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு என்றே நிறை வரலாறு இருக்கு. கல்விக்கு பேர் போன இடம். கொள்கையுள்ள மண் இது. இன்னைக்கு உங்கள எல்லாரையும் பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு பரவம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}