மும்பை: 2024ம் ஆண்டில் நடந்த போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு மைதானத்தின் பிட்ச் மற்றும் அவுட் பீல்ட் குறித்த தரப் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு இறுதியில் அதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மைதானத்தின் பிட்ச் எப்படி இருந்தது, அவுட் பீல்ட் எப்படி இருந்தது என்பதை தரவரிசைப்படுத்தி சான்று அளித்து வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். அந்த அடிப்படையில் ஜனவரி மாதம் தொடங்கி, நவம்பர் மாதம் வரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் மைதானங்களுக்குரிய தரப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி.

அந்த வரிசையில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மைதானங்களுக்கும் குட் மற்றும் வெரி குட் கிடைத்துள்ளது. இதில் சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தின் பிட்ச் மற்றும் அவுட்பீல்ட் ஆகிய இரண்டுக்குமே வெரிகுட் கொடுத்துள்ளது ஐசிசி. கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த ஆண்டு இங்கு நடந்த ஒரே டெஸ்ட் போட்டி இதுதான். இந்தப் போட்டி நடந்த சமயத்தில் மைதானத்தின் பிட்ச்சும், அவுட்பீல்டும் சிறப்பாக இருந்ததற்காக இந்த வெரிகுட் கிடைத்துள்ளது.
இதுதவிர இந்தியாவின் இதர மைதானங்களில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச்சுக்கு குட்டும், அவுட்பீல்டுக்கு வெரிகுட்டும் கிடைத்துள்ளது. கொல்கத்தா, லக்னோ, தரம்சலா மைதானங்களுக்கும் வெரிகுட் கிடைத்துள்ளது. மொஹாலி பிட்ச்சுக்கு குட்டும், அவுட்பீல்டுக்கு வெரிகுட்டும் கிடைத்துள்ளது. விசாகப்பட்டனம் மைதானத்தின் பிட்ச் மற்றும் அவுட்பீல்டுக்கும் வெரிகுட் கிடைத்துள்ளது.
இந்தியா மைதானங்களிலேயே மோசமான பிட்ச் என்ற பெயரை பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் பெற்றுள்ளது. சராசரிக்கும் கீழ் என்ற தரத்தையே ஐசிசி கொடுத்துள்ளது. அதேசமயம், அவுட்பீல்டுக்கு வெரிகுட் கிடைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஐபிஎல் ஒளிபரப்பிற்கு வங்கதேச அரசு அதிரடித் தடை
மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க "நோ" சொல்ல வேண்டிய 5 விஷயங்கள்
தை பிறந்தால் வழி பிறக்கும்... கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன: பிரேமலதா விஜயகாந்த்
ஏன் இந்த அவசரம்...? பாரதிராஜா பற்றி தவறான தகவல்கள் பதிவிடுவோர் கவனத்திற்கு
யாருடன் கூட்டணி என ஜன.,9 மாநாட்டில் அறிவிப்பு...தேமுதிக பிரேமலதா திட்டவட்டம்
தமிழக அரசியலில் அதிரடி: விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் திமுக, அதிமுக நிர்வாகிகள்!
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு
இன்று தேசிய பறவைகள் தினம்...பறவைகளின் அருமை உணர்ந்து பாதுகாப்போம்
தங்கத்தின் விலை நிலவரம் என்ன தெரியுமா? இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!
{{comments.comment}}