காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

Dec 11, 2025,03:18 PM IST

- அ.சீ. லாவண்யா


மனிதனின் வாழ்வு இயற்கையோடு ஒன்றி தான் உள்ளது. உதாரணமாக நாம் அனைவரும் பயன்படுத்தும் தேன், வீட்டுக்கு தேவைப்படும் கட்டில், அலமாரிகள், கதவு, வாசனை பொருட்கள் ஆன ஜவ்வாது, நறுமணம் தரக்கூடிய பொருட்கள் எல்லாம் இயற்கையின் மூலம் தான் நமக்கு கிடைக்கிறது. இதனாலே நாம் இயற்கையின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகின்றோம். 


சரி.. இந்த இயற்கையின் அம்சங்கள் எல்லாவற்றுக்கம் பேசிக் கொள்ளும் சக்தி இருந்தால் என்ன பேசிக் கொள்ளும்.. கற்பனை செய்து பார்ப்போமா!


ஒரு நாள் மலை, காடு, கடல், வயல், போன்ற இயற்கையின் அம்சமான இவைகள் எல்லாம் ஒரு நாள் பேசி கொண்டிருந்தன.




மலை:  நான் இந்தபூமியின் உச்சியில் இருந்து தினமும் மேகங்களைத் தொடும் உயரத்தில் நிற்பேன். இயற்கையின் காவலனாக!


காடு: மலையாரே என்ன இது இப்படி சொல்லிவிட்டீர்கள்! ஆனால் என் நிழலில் தான் ஆயிரம் உயிர்கள் பாதுகாப்புடன் வாழ்கின்றன."


கடல்: நீங்கள் அனைவரும் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். ஆனால் என் அலைகளில் தான் உலகின் பாதி உயிர்க்காற்று உருவாகிறது என்பதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே.


வயல் : அடடா! நீங்கள் எல்லாம் பெரிய விஷயம் சொல்றீங்க. ஆனா மனிதனுக்கு உணவு தருக்கிறவன் நான் தான். என்னிடம் இருந்து சமையலுக்கு தேவையான எல்லா பொருளும் கிடைக்கிறது நண்பர்களே. 


மலை : அப்போ நாம எதுக்காக வாதம் பண்ணுறோம்?


காடு: அதே தான்டா... நாம எல்லோரும் சேர்ந்து தான் இயற்கை!"


கடல்: ஆம்... நம்மில் யாரும் தனியாக முழுமையில்லை.


வயல்: சரிதான்..  நாம் மிக பெரிய பந்தமான இயற்கை எனும் பந்ததில் ஒன்றோடு ஒன்றாக அமைந்திருகிறோம். யாரும் சண்டை போடும் காலம் இதுவல்ல. நாம் ஒன்றிணைந்து மனிதர்களுக்கு உதவும் நேரமே இது.


காடு: நான் மனிதர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். என்னிடம் உள்ள மலைகளில் விளையும் பொருளை தருவேன். 


மலை: நான் மக்களுக்கு என்னிடம் உள்ள விறகுகள், மரத்தில் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் மக்களுக்கு தேவைப்படும் மருந்து போன்ற உபயோகும் வகையில் நான் மக்களுக்காக அளிப்பேன்.

 

வயல்:- நான் மக்களுக்கு என்றும் உணவுக்கு குறைவில்லாமல் நான் என்றும் செழிப்பாக வளர்ந்து உதவுவேன்.


கடல்: நான் மக்களுக்கு தேவைப்படும் சுவாசிப்பதற்கு தென்றலையும், என்னால் வாழும் மீனவர்களுக்கும் என்றும் ஒரு அன்னையாக இருப்பேன்.


இப்படியாக ஒன்றாக இணைவோம் மக்களை காப்போம் என்ற அந்த அமைதியான உரையாடல் முடிந்தது. என்ன ஒரு நல் எண்ணம் இயற்கைக்கு. அவர்களே அப்படி இருக்கும்போது, மனிதர்கள் நாம் பயன்படுத்தும் இந்த இயற்கை வரங்களை நாம் பாதுகாப்போம்.  நம்மை பாதுகாகவும், இயற்கை யோசிக்கும் போது மனிதர்களாகிய நாம் இயற்க்கைகாக சற்று யோசிப்போம், கடவுள் நமக்கு என்று அள்ளித் தந்த இயற்கையை நேசிப்போம்.


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

தாயுமானவர்.. ராமநாதபுரம் மன்னர் செய்த அறியா தவறு.. இன்று வரை தொடரும் நம்பிக்கை!

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

உலகிலேயே மிக நீளமான வார்த்தை எது தெரியுமா.. நாக்கும், வாயும் பத்திரம் பாஸ்!

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்