சென்னை: 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்தால் ஒரு சதவீத கட்டண குறைப்பு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது, பெண்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக ஆட்சியில் பெண்களுக்கான பல திட்டங்கள் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், மகளிர் உதவி எண் 181 மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் போன்றவை பல சிறப்புகள் பெற்று விளங்குகின்றன.

மேலும், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பாலினப் வேறுபாட்டை தகர்க்கவும், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதேபோல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ்
மாணவிகள் உயர்கல்வியில் தொடர நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், மகளிர் 181 திட்டத்தின் மூலம் உதவிகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குடும்பங்களை சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்வது மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டமாகும். அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஏழை எளிய ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி வழங்கப்படுகிறது. அதேபோல் பெண்களிடையே சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள்,தொட்டில் குழந்தை திட்டம், பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் திட்டம், ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், கலப்பு திருமண திட்டம் என பல்வேறு பெண்களுக்கான திட்டங்கள் ஏற்கனவே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுமட்டுமல்லாமல் முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம், பெண்களுக்கான உயர்கல்வி திட்டம், புதுமைப் பெண் திட்டம், பேறுகால விடுப்பு, முதல் பெண் அர்ச்சகர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியத் தொகை வழங்கும் திட்டம், அரசுப் பணியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, அரசு மகளிர் விடுதி, பெண் காவலருக்கு விலக்கு என பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெடை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக பெண்களுக்கான பல கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் 2000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம், ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம், பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் ஒரு சதவிகிதம் கட்டண பதிவு குறைப்பு என பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
அதிலும் பெண்கள் பெயரில் 10 லட்சம் வரையிலான வீடு, வீட்டுமனைகள், விவசாய நிலங்கள், உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களையும் பதிவு செய்தால் பதிவு கட்டணத்தில் இருந்து ஒரு சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் குடும்பப் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்று, அதிக ஆதரவைத் பெறும் வாய்ப்பு வலுத்துள்ளது. மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உண்டு என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு தேசிய அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திற்குப் பிறகுதான் மத்திய அரசே இதை கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பதிவுக் கட்டண சலுகை என்ற அறிவிப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}