திருப்பதி: திருமலையில் இன்னும் 120 முதல் 130 நாட்களுக்கு மட்டும் தான் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழக்கமாகி வாழ்க்கையில் சோதனை அதிகரித்து அதனால் மன வேதனை அதிகரித்து, அதை தீர்க்கவும், அதைச் சொல்லி பெருமாளிடம் கோரிக்கை வைக்கத்தான் பக்தர்கள் திருப்பதிக்குப் போகிறார்கள். ஆனால் அந்த ஏழுமலையானுக்கே இந்த சோதனையா? என இப்போது பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிறம்பியிருக்கும். அதிலும் குறிப்பாக வருடாந்திர பிரமோற்சவத்தின் போதும், புரட்டாசி மாதத்திலும் பக்தர்கள் அதிகளவில் ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள். வருடாந்திர பிரமோற்சவத்திற்கும் இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் நீர் தற்போது பற்றாக்குறையாகியுள்ளது. திருமலைக்கு வரும் தண்ணீர் சப்ளை குறைந்திருப்பதே இதற்குக் காரணம், மழை போதிய அளவில் இல்லாததால் திருமலைக்கு நீர் சப்ளை வழங்கும் அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் அடுத்து வரும் 4 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் சப்ளை இருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலையைப் பொறுத்தவரை தினசரி 50,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள். திருவிழாக் காலங்களில் இது அதிகமாக இருக்கும். திருமலையில் 5 அணைகள் உள்ளன. அங்கிருந்துதான் தண்ணீர் சப்ளை ஆகிறது. தினசரி சராசரியாக 43 லட்சம் கேலன் தண்ணீர் திருமலைக்கு தேவை. இதில் 18 லட்சம் கேலன் தண்ணீர் திருமலை அணைகளிலிருந்தும், மீதமுள்ள தண்ணீர் கல்யாணி அணையிலிருந்தும் கிடைக்கிறது.
திருமலையில் வருடத்திற்கு 450 திருவிழாக்கள் வரை கொண்டாடப்படுகிறது. அதிலும் முக்கியமான வருடாந்திர பிரம்மோற்சவ விழா, அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் அங்குரார்ப்பணம் அக்டோபர் 3ம் தேதி தொடங்குகிறது. இதில் அக்டோபர் 3ம் தேதியைத் தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 8 மணி முதல் 10 மணி வரையும், பிறகு மாலை 7 மணி முதல் 9 மணி வரையும் வாகன சேவைகளும் நடைபெறும். லட்சக்கணக்கில் பக்தர்கள் இதைக் காண கூடுவார்கள்.
திருமலைக்கு வரும் ஏராளமான பக்தர்களின் நலன் கருதி, தண்ணீர் வீணாவதைத் தவிர்க்குமாறும், நீர் நுகர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேவையற்ற விரயத்தைத் தவிர்த்து, சிக்கனமான முறையில் தண்ணீரைப் பயன்படுத்துமாறு பக்தர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}