டெல்லி: டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளை சுற்றி வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பருவமழை தீவிரமடைந்தினால், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகம், கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவால், 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 1000த்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
தற்போது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்திர பிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லியில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், மரங்கள் சாய்ந்தும் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே பணிபுரிந்து வருபவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அந்த மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி, ஹரியானா ,பஞ்சாப்,உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}